நடனமாடும் போது தரையில் இருந்த தண்ணியில் காலை வைத்து வழுக்கி விழுந்த லட்சுமி மேனன்.

0
45892
lakshmi

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே வகையில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.கும்கி படத்திற்கு பின்னர் சசிகுமாருடன் ‘சுந்தர பாண்டியன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது.

View this post on Instagram

❤️

A post shared by lakshmimenon96 (@lakshmimenon967) on

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.ஆரம்ப காலகட்டத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த லட்சுமி மேனன் கொஞ்சம் மாடர்னாக கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அது அவருக்கு செட் ஆகாததால் படவாய்ப்புகளும் இவருக்குகுறையத் துவங்கின.

- Advertisement -

கடைசியாக விஜய் சேதுபதியின் ‘ரெக்க’ படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் எந்த படத்திலும் அவரை காணமுடியவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் எங் மங் ஜங் படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துள்ளதாகவும் தற்போது படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாகவும் கூறி இருந்தார் லட்சுமி மேனன். இந்த நிலையில் லட்சுமி மேனன், வீட்டில் நடனம் பயிற்சயில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடனமாடும் போது தரையில் இருந்த தண்ணீரை கவனிக்காமல் காலை வைத்து வழுக்கி விழுந்துள்ளார். இதோ அந்த வீடியோ.

-விளம்பரம்-
Advertisement