தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் ராய் லட்சுமி தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தாம் தூம், அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பொதுவாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராய் லட்சுமி அவர்கள் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.
இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். இருந்தும் அதெல்லாம் பயனில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சிகளில் கூட நடித்திருந்தார் அம்மணி. மேலும், நடிகை ராய் லட்சுமி அவர்கள் சமீபத்தில் உதட்டை அழகு ஆக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்திருந்தார் என்று சர்ச்சைகள் வெளியானது.
ட்ரைலரை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தற்போது தமிழில் இவர் சிண்ட்ரெல்லா, மிருகா என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை லட்சுமி ராய், பாய்சன் 2 என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார். தற்போது அந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸில் லிப் லாக் காட்சிகளும் படுக்கையறை காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.