தனது தந்தையை இழந்த லட்சுமி ராய் – புகைப்படத்தை பகிர்ந்து உருக்கம்.

0
612
lakshmi-rai-

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராய் லட்சுமி. நடிகர் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற படத்தின் மூலம் தான் ராய் லட்சுமி தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தாம் தூம், அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா, மொட்ட சிவா கெட்ட சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ராய் லட்சுமி அவர்கள் தமிழ் மொழியில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பொதுவாக சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமி இந்தி சினிமாவிற்க்கு சென்றதும் கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வருகிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு ராய் லட்சுமி அவர்கள் பாலிவுட்டில் ஜூலி 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்தப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் நடிகை ராய் லட்சுமி அவர்கள் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருந்தார். இருந்தும் அதெல்லாம் பயனில்லாமல் போனது. அதுமட்டுமில்லாமல் லிப் லாக் காட்சிகளில் கூட நடித்திருந்தார் அம்மணி. மேலும், நடிகை ராய் லட்சுமி அவர்கள் சமீபத்தில் உதட்டை அழகு ஆக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் சர்ஜரி கூட செய்திருந்தார் என்று சர்ச்சைகள் வெளியானது.

Image

இந்த நிலையில் தற்போது ராய்லட்சுமி தன்னுடைய அப்பா இப்படி இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தன்னை ஸ்ட்ராங்கான மனிதராக உருவாக்கியவர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மிஸ் யூ அப்பா என தெரிவித்து தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.ராய் லட்சுமியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி அவரின் அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement