சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது. பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள்.

பின் கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், மலையாள சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஹேமா கமிட்டி வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இது ஐந்து வருடங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல் தான். ஆனால், இப்போது தான் இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த மாதிரியான அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் மலையாள சினிமா உலகில் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலுமே நடக்கிறது.
நடிகைகள் நிலைமை குறித்து சொன்னது:
அதே போல் சினிமா என்றால் இப்படித்தான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா இயக்குனர்களும், எல்லா நடிகர்களுமே இதே மாதிரி தவறாக நடக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன். பல பேர் நடிகைகளுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். சிலர் செய்த தவறால் எல்லோருக்குமே கெட்ட பெயர் ஏற்படுகின்றது. மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா சினிமாக்களிலும் சில நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை இருக்கிறது. இப்படி நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு கூப்பிடுவதற்கு காரணம் அவருடைய குடும்ப சூழ்நிலை தான்.
https://youtu.be/kGhtLrjZXWU?si=mL0wurtVNqMIcj8B
அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு காரணம்:
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையுடனும், கனவுடனும் வருபவர்களை தான் இந்த மாதிரி அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைக்கு கூப்பிடுகிறார்கள். அவர்கள் குடும்ப சூழ்நிலைக்காக வேறு வழியில்லாமல் ஒத்து கொள்கிறார்கள். மேலும், புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளுக்கு இந்த மாதிரியான தொல்லைகள் இல்லை. சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு தான் இந்த மாதிரி பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. இவர்களுக்கு நடிப்பை தாண்டி வேற எதுவுமே தெரியாது. பொதுவாகவே நடிகைகள் ஒரு தொழில் இல்லை என்றால் இன்னொரு தொழிலை கைவசம் வைத்து இருக்கிறார்கள்.
இந்த மாதிரியான நடிகைகள் கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். தமிழ் சினிமாவில் இந்த மாதிரி இப்ப இருக்கிற காலகட்டத்தில் எந்த பிரச்சினையும் கிடையாது.

சினிமா குறித்து சொன்னது:
விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், அருள்நிதி, மாரி செல்வராஜ், ரஞ்சித் போன்ற பல பேர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து யாராவது பெண்களை அட்ஜஸ்ட்மெண்ட் கூப்பிட்டார்களா? என்று சொல்ல சொல்லுங்கள். அவர்கள் யாரையுமே குறை சொல்ல முடியாது. இது சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் தெரியும். நான் சினிமாவில் 40 வயதிற்கு மேல் தான் நடிக்க வந்தேன். ஆனால், நான் சினிமாவில் வரும்போது என்னுடைய கணவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமில்லாமல் பல திறமைகளும், தைரியமும் எனக்கு இருந்ததால் தான் அதை எதிர்கொள்ள தயாராக இருந்தேன். ஆனால், நடப்பதை பார்க்கும்போது சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்வது போல தான் இருக்கிறது. இந்த பிரச்சனை சினிமாவில் இருப்பவர்களுக்கு மட்டும் நடக்கவில்லை. மருத்துவமனையில் வேலை பார்த்த ஒரு பயிற்சி மருத்துவருக்கு நடந்த கொடூரம் உலகமே அறிந்தது தான். டாக்டர்கள், மாணவர்கள், வீட்டிற்குள்ளே உள்ள பெண்களுக்குமே பாதுகாப்பு இல்லை என்று எமோஷனலாக பேசியிருந்தார்.






