நான் உயிரோடு தான் இருக்கேன், இப்போ இதான் பண்ணிட்டு இருக்கேன் – பிரபல நடிகை லட்சுமி வேதனை.

0
1335
lakshmi
- Advertisement -

தான் இறந்ததாக பரவிய வதந்திகளுக்கு நடிகை லட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லட்சுமி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொகுப்பாளரும் ஆவார். லட்சுமியின் தந்தை மற்றும் தாய் இருவருமே சினிமா துறையில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தான் இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். முதலில் நடிகை லட்சுமி நடித்த படம் ஜீவனாம்சம். இந்த படம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின் இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். 70 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும், தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

நடிகை லட்சுமி திரைப்பயணம்:

தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு உட்பட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்று காலை நடிகை லட்சுமி அவர்கள் உடல்நிலை குறைவால் இறந்து விட்டதாக சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி வந்தது. இதுகுறித்து பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

லட்சுமி இறப்பு குறித்த செய்தி:

ஆனால், இதை விசாரித்த போது தான் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் யானை இறந்தது என தெரியவந்தது. அந்த யானையின் பெயர் லட்சுமி. அதனால் லட்சுமி இறந்த செய்தி என்று வந்ததை நடிகை லட்சுமி என பலரும் நினைத்து வதந்தியை கிளப்பி இருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் திரையுலகினர் மற்றும் மீடியா என பலருமே நடிகை லக்ஷ்மியை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

நடிகை லட்சுமி அளித்த பேட்டி:

இந்நிலையில் இது குறித்து நடிகை லட்சுமி அவர்கள் கூறியிருப்பது, இன்று காலையில் இருந்து எனக்கு எல்லோரும் போன் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னிக்கு எனக்கு பிறந்தநாள் கூட இல்லையே. அதற்கு பிறகு ஏன் இத்தனை பேர் கூப்பிடுகிறார்கள்? என்று விசாரித்தேன். அப்போது தான் நடிகை லட்சுமி இறந்துட்டாங்க என்ற ஒரு செய்தி போட்டு இருக்காங்க. பிறந்தால் இறந்து தானே ஆகணும். இதுக்கெல்லாம் பயப்பட போவதில்லை, கவலைப்படவும் போவதில்லை.

வதந்தி குறித்து சொன்னது:

ஆனால், வேலை வெட்டி இல்லாதவங்க இதை பரப்பிட்டு இருக்காங்க என நினைக்கிறப்ப திருந்த மாட்டாங்களா? என்று நினைக்கத் தோணுது. இந்த செய்தி கேள்விப்பட்டதும் பல பேர் கவலைப்பட்டு அக்கறையாக விசாரித்து இருந்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்துமஸ், புது வருஷத்துக்காக இப்ப ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். சந்தோஷமாகத்தான் இருக்கின்றேன். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement