நடிகை மஹிமா நம்பியாருக்கு இப்படி ஒரு வியாதியா? தினந்தோறும் இரவில் கஷ்டப்படணுமே.

0
1515
mahima
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் மகிமா நம்பியாரும் ஒருவர். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் தனது 15 வயதிலேயே மலையாளத்தில் வெளியான காரியஸ்தன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு விளம்பர படங்களில் நடித்தார். பிறகு தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தில் பள்ளிப்பருவ பெண்ணாக நடித்தவர் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்தில் நடிகை மஹிமா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்கு பின்னர் இவர் மொசக்குட்டி, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Mahima Nambiar Biography, Wiki, DOB, Family, Profile, Movies list

எப்போதும் நடிகை மஹிமா அவர்கள் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். அதுவும் தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் நடிகை மஹிமா அவர்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக நடிகை மஹிமா அவர்கள் தன்னுடைய ஓவிய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்தனர். மேலும், இவர் வீட்டில் உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது என்று தன்னுடைய பொழுதைப் போக்கிக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை மஹிமா நம்பியார் அவர்கள் தனக்கு இன்சோம்னியா என்ற தூக்கமின்மை பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு அவர் யோகா மூலம் சரி செய்ய முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே இந்த மாதிரி பிரச்சனை இருப்பவர்கள் 40 மற்றும் 50 வயதை தாண்டியவர்களாக இருப்பார்கள். ஆனால், இந்த இளம் வயதிலேயே இந்த பிரச்சனையால் நடிகை மஹிமா நம்பியார் அவஸ்தைப்பட்டு வருகிறார். தற்போது, இவர் ஐங்கரன், அசுரகுரு உள்பட சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு கிட்னா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என்று நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement