பல ஆண்டுகள் கடந்தும் நயன்தாரா இதை மறக்கவே இல்லை என்று பிரபல நடிகை அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார்.
இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
அந்த வகையில் கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த ஜவான் படம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இதனை அடுத்து சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருந்த படம் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட ரெடின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இதை அடுத்து தற்போது நயன்தாரா அவர்கள் கோலிவுட், பாலிவுட் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் நயன் கொண்டு வருகிறார்.
நயன்தாரா குடும்பம்:
இப்படி இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அதிலும் பிரபுதேவா, சிம்புவின் காதல் விகார விவகாரத்தில் நயன்தாராவின் பெயர் ரொம்பவே கெட்டுப் போனது. இருந்தாலும், மனம் தளராமல் நயன்தாரா தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வந்திருந்தார். பின் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள்.
மாலா பார்வதி பேட்டி:
திருமணமான நான்கே மாதத்தில் வாடகை தாய் மூலம் இவர்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகும் நயன்- விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய கேரியரில் விக்னேஷ் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவுடன் சேனலில் பணியாற்றிய மாலா பார்வதி அவர்கள் பேட்டியில், நான் சேனல் ஒன்றில் வேலை செய்தபோது தான் நயன்தாராவை பார்த்தேன். ஆனால், அவருடைய உண்மையான பெயர் டயானா. எனக்கு மேக்கப் போட ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த சேனலின் மேக்கப் ரூமுக்கு நான்தான் பொறுப்பு. ஒரு நாள் சமயம் என்ற ஒரு நிகழ்ச்சிக்காக நயன்தாராவிற்கு மேக்கப் போட்டுக் கொண்டிருந்தேன்.
நயன் குறித்து சொன்னது:
அப்போது அவர் பெற்றோர் என்னிடம், என்னுடைய மகளுக்கு இரண்டு படத்தில் வாய்ப்புகள் வந்திருக்கிறது. எந்த படத்தில் நடிக்கலாம் என்று கேட்டார்கள். நான் சத்தியன் அந்திகாடு இயக்கத்தில் அவருடைய கேரியரை தொடங்கினால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அதன்படி சத்தியன் அந்திகாடு இயக்கிய படத்தின் மூலம் தான் நயன்தாரா தன்னுடைய கேரியை தொடங்கினார். அதற்கு பிறகு பல ஆண்டுகள் நான் நயன்தாராவை பார்க்கவில்லை. கடைசியாக அவருடைய அன்னப்பூரணி படத்தின் சூட்டிங் பாட்டில் தான் பார்த்தேன். அப்போது அவருக்கு என்னை ஞாபகமா இருக்குமா? என்று நினைத்து பார்த்தேன். ஆனால், என்னை பார்த்த உடனே என்னிடம் வந்து ரொம்ப இயல்பாக நயன் பேசினார்.
நயன் செய்த செயல்:
இத்தனை வருடங்களாக என்னை நினைவு வைத்திருந்து என்னிடம் நயன்தாரா பேசியது ரொம்ப சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஒரு பெரிய நடிகை என்ற பந்தாவை அவர் காட்டவில்லை. அதேபோல் நான் சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என்று தெரிந்து கொண்டு எனக்காக சாப்பாடு வரவழைத்து கொடுத்தார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இந்த அளவிற்கு தென்னிந்திய சினிமா உலகில் நயன்தாரா சாதித்திருப்பதை பார்த்தால் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.