லாரன்ஸை போன்றே 13 ஆண்டுகளாக சத்தமில்லாமல் நடத்தி வரும் அறக்கட்டளையை பற்றி சொன்ன பிக் பாஸ் பிரபலம் .

0
1338
Lawrance
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை எடுத்தவர் பாடலாசிரியர் சினேகன். தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக இருந்து வந்த இவர் தனது ஆரம்ப காலங்களில் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் பணிபுரிந்தார்.பின்னர் தனியாக வந்து பாடல்களை எழுத துவங்கி தற்போது வரை 2500 பாடல்கள் எழுதியுள்ளார். பின்னர் ஒரு சில படங்களில் நடித்த சினேகன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சினேகன் பற்றிய செய்திகள் தீப்பெட்டி கணேசனால் வைரலாக பரவிகிறது.

-விளம்பரம்-

தமிழில் ‘ரேணிகுண்டா’, ‘பில்லா 2’, ‘கண்ணே கலைமானே’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இந்த ஊரடங்கிற்கு முன்பே பட வாய்ப்புகள் குறைந்ததால் கடும் சிரமத்தில் தான் இருந்தார். அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகளை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார்இந்த கரோனா ஊரடங்கில் கடும் சிரமத்துக்கு ஆளானார். மேலும், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு, தீப்பெட்டி கணேசன் தன்னுடைய நிலைமையை விளக்கி பேட்டி ஒன்றை அளித்தார்.

இதையும் பாருங்க : நான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இத்தனை லட்சம் பணத்தை எடுத்துள்ளார் – நடிகை பகீர் புகார்.

- Advertisement -

இவருடைய நிலைமையை அறிந்து லாரன்ஸ் தீப்பெட்டி கணேசனின் பிள்ளைகளின் ஏற்பதாக கூறி இருந்தார். மேலும், தீப்பெட்டி கணேசன் உதவி கோரி இருந்த அந்த குறிப்பிட்ட வீடியோவை அஜித்தின் மேலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார். அதே போல அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவ தீப்பெட்டி கணேசனின் நிலையை அறிந்த சினேகன் நேரில் சென்று சந்தித்து உதவி செய்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சினேகன், தன் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வசதியில்லை என கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைத்தளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டு இருந்தார். அவரை இன்று சந்தித்து எனது ‘சினேகம் செயலகம்’ என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப்பொருட்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்துவிட்டு வந்தேன்.

-விளம்பரம்-

இது போல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்த தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் கவிஞர் சினேகன் கடந்த 13 வருடங்களாக ‘சினேகம் செயலகம்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறது பலரும் அறிந்திராத ஒரு விஷயம். இந்த அறக்கட்டளையில் 13 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறாராம் ஸ்னேகன்.

இதையும் பாருங்க : ஜோதிகா தஞ்சை கோவில் விவகாரம், ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா? – விஜய்சேதுபதி விளக்கம்

மேலும் இந்த அறக்கட்டளை மூலமாக 21 திருநங்கைகளை படிக்க வைத்து வருகிறாராம். வருடத்திற்கு கல்விச் செலவிற்கு மட்டும் 15 முதல் 20 லட்சம் ரூபாயை செலவு செய்து வருகிறாராம் சினேகன். மேலும், தனது வருமானத்தில் 100 ரூபாயோ அல்லது ஆயிரம் ரூபாயோ அதில் 60 சதவீதத்தை இது போன்ற நல்ல காரியங்களுக்காக தான் பயன்படுத்தி வருகிறாராம் சினேகன். ஆனால், இத்தனை ஆண்டுகள் இதனை வெளியில் செல்ல விரும்பாத சினேகன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

Advertisement