மையோசைடிஸ் நோய் பாதிப்பு – சமந்தாவிற்கு கிடைத்த கௌரவம். என்ன தெரியுமா ?

0
1320
samantha
- Advertisement -

மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக சமந்தா நியமிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா படத்தில் “ஊ சொல்றியா” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

-விளம்பரம்-
Samantha

பின் சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்கள் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடைசியாக சமந்தா நடிப்பில் வெளியாகி இருந்த சாகுந்தலம் படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் சமந்தா மனம் உடைந்து போய் விட்டார். இதை அடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் அடுத்து உருவாகி இருக்கும் குஷி என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சமந்தா திரைப்பயணம்:

மேலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் தான் குஷி படத்தின் இசை வெளியீட்டு நடைபெற்று இருக்கிறது. ஏற்கனவே சமந்தாவின் கடைசி படமான சகுந்தலம் படமும் விஜய் தேவர்கொண்டாவின் கடைசி படமான லைகர் படமும் மாபெரும் தோல்விப்படமாக அமைந்து இருந்தது. இதனால் குஷி திரைப்படம் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தாவிற்கு முக்கியப்படமாக அமையும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவை பாதித்த நோய்:

இதனிடையே கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா அவர்கள் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டு இருந்த தகவல் அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் தீவிரமாக சிகிச்சை எடுத்து வருகிறார். ஆனால், அந்த நோயிலிருந்து சமந்தா பூரணமாக குணமடையவில்லை. தற்போது அந்த நோயின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. இதனால் சமந்தா அவர்கள் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

மையோசைடிஸ் இந்தியா விளம்பர தூதர்:

அது மட்டும் இல்லாமல் ஒரு வருடத்திற்கும் மேலாக சினிமாவை விட்டு விலக சமந்தா முடிவு எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இவர் தனக்கு பிடித்த மற்றும் மனதிற்கு நிம்மதியான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சமந்தா அவர்கள் மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அந்த நிறுவனம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்கள்.

மையோசைடிஸ் இந்தியா தொண்டு நிறுவனத்தின் பதிவு:

அதில் அவர்கள், “மாற்றத்தின் புதிய முகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மையோசைடிஸ் இந்தியாவின் புதிய பிராண்ட் அம்பாசிடராக சமந்தாவை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மையோசைடிஸ் நோயுடன் போராடிக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், நம்பிக்கையை விதைக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இணைந்து முன்னேறுவோம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement