41 வயதிலும் குறியாத கிளாமர் – நீச்சல் உடையில் மாளவிகா வெளியிட்ட புகைப்படம்.

0
3440
malavika
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மாளவியா அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். .அந்த படத்திற்கு கதாநாயகியாக மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார். அறிமுகமான சில காலத்திலேயே அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை என்ற பெருமையை பெற்ற நடிகைகளில் இவரும் ஒருவர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

அஜித்துடன் நடித்த பின்னர் ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என்று பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த மாளவிகா கடந்த 2005 ஆண்டு ‘சி யூ அட் நைட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தான் இவரது சினிமா வாழ்க்கைக்கு ஆப்படித்து துரத்தி விட்டது.

- Advertisement -

அந்த படத்தில் நடித்ததற்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைந்து போகவே ஒரு சில படங்களில் துணை நடிகையாகும் ஐட்டம் டான்ஸராகவும் ஆட்டம் போட்டார் அம்மணி. பின்னர் அந்த வாய்ப்புகளும் சரியாக அமையாமல் போக கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் திருமணத்திற்கு கடைசியாக 2009 ஆம் ஆண்டு ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார்.

This image has an empty alt attribute; its file name is 2-54.jpg

திருமணத்திற்கு பின்னரும் தனது உடல் அமைப்பை கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள உடற் பயிற்சிகளையும், யோகா சனங்களையும் செய்து வருகிறார் மாளவிகா. இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் இப்பொழுதுகூட இவர் கிளாமரான போஸ்டுகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இப்பொழுது வைரலாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement