எப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
3909
actress-manisha-koirala
- Advertisement -

1995ஆம் ஆண்டு வெளிவந்த பாம்பே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. இந்த மனிஷா கொய்ராலா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? இவர் எப்படிப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர் தெரியுமா? என்னென்ன செய்து வருகிறார் தெரியுமா?

-விளம்பரம்-

manisha koirala

- Advertisement -

மனிஷா கொய்ராலா 1970ஆம் ஆண்டு நேபால் தலைநகர் காத்மாண்டுவில் பிறந்தவர். இவருடைய குடும்பம் நேபால் நாட்டில் மிகப் பிரபலமான குடும்பம் ஆகும். மனிஷாவின் தாத்தா பிஸ்வேஸ்வர்பிரசாத் கொய்ராலா நேபாள நாட்டின் பிரதமராக இருந்தவர். மேலும், அப்பா பிரகாஷ் கொய்ராலா அந்த நாட்டின் பல துறைகளின் அமைச்சர் ஆவார்.

மனிஷாவின் அண்ணன் சித்தார்த் ஒரு நடிகர் ஆவார். இப்படி ஒரு பிரபலமான பெரிய குடும்பத்தில் பிறந்த மனிஷா உத்திரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் படித்தார்.

-விளம்பரம்-

manisha family

அதன்பின்னர் 1991ஆம் ஆண்டு சடுகர் என்ற ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகம் ஆனார். நல்ல நடிப்பு திறமை வாய்ந்த கொய்ராலா அதன் பின்னர் பல நல்ல படங்களில் நடித்தார். இவர் ஷாருக்கானுடன் நடித்த ‘உயிரே’ படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. தமிழில் அர்ஜூனுடன் முதல்வன் படத்தில் நடித்திருப்பார்.

கடைசியாக தனுஷ் நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுசுக்கு மாமியராக நடித்தார். நேபாலில் அரசியல் சில நடிவடிகைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கடந்த 1999ஆம் ஆண்டு நேபால் நாட்டிற்கான ஐநாவின் நல்லெண்ணத் தூதராக நிமியமிக்கப்பட்டார்.

Manisha-Koirala

Manisha-Koirala

manisha-koirala actress

மனிஷாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு நேபால் தொழிலதிபர் சாம்ராட் தகல் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இருவரும் பிலாந்தில் ஹனிமூன் கொண்டாடினார். ஆனால், 6 மாதத்தில் மண வாழ்க்கை கசந்து போனது. இதனை விவாகரத்து கோரி கடந்த 2012ஆம் ஆண்டு விவகாரத்து பெற்றார்.

manisha-koirala-husband

இதன்பின்னர் மனிஷா கொய்ராலாவிற்கு புற்றுநோய் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் சென்று தனது தலையமுடியை மொட்டை அடித்துக்கொண்டு சிகிச்சை பெற்று புற்றுநோயில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தார். மேலும், நேபால் நாட்டில் இருந்து இளம் பெண்களை அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவகளுக்கு எதிராகவும் போராடி வருகிறார். தற்போது நேபாலில் நல்லெண்ணத் தூதராக பணியாற்றியும் பொது சேவையும் செய்து வருகிறார்.

Advertisement