அவர் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார் – மஞ்சிமா மோகன் பதிவிட்ட பதிவு.

0
931
manjima
- Advertisement -

அவர் என்னை வேண்டாம்ன்னு சொல்லிவிட்டார் என்று மஞ்சிமா மோகன் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதுவும் இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார் மஞ்சுமா. மேலும், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை மஞ்சிமா மோகன் கொள்ளை அடித்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

மஞ்சிமா மோகன் நடித்த படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில படங்களில் மஞ்சிமா மோகன் நடித்து இருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் .

மஞ்சிமா மோகனின் FIR படம்:

அதற்குப் பிறகு இவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தார். இதனால் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதனால் இவருடைய உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும் மஞ்சிமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான FIR திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஆனந்த் மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மஞ்சிமா மோகன்-கௌதம் கார்த்திக் திருமணம்:

இதனிடையே சில மாதங்களாகவே சோஷியல் மீடியாவில் மஞ்சிமா மோகன், நடிகர் கௌதம் கார்த்திக்கும் காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்கு மஞ்சிமா மோகன் இந்த காதலை மறுப்பு தெரிவித்து இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்தநிலையில் எஃப்ஐஆர் படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனை அடுத்து மனு ஆனந்த்திடம் உதவி இயக்குனர்களாக பணிபுரியும் வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது.

மஞ்சிமா மோகன் பதிவு:

இந்நிலையில் இது குறித்து மஞ்சுமா மோகன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நான் ஏற்கனவே இதற்காக விண்ணப்பித்தேன். ஆனால், என்னை வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார் என்று கூறி இருக்கிறார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து இதைப் பார்த்த இயக்குனர் மனு ஆனந்த் கூறியிருப்பது, நான் உங்களுடைய விண்ணப்பத்தை பெறவில்லை. ஒருவேளை ஈமெயிலில் அது தவறி இருக்கலாம் என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement