விஜய், அஜித் இதில் யாரை பிடிக்கும்..! மஞ்சிமா இப்படி சொல்லிட்டாங்களே.!

0
287
Mangima

தமிழ் சினிமாவில் முன்னணனி நடிகர்களாக விளங்கி வரும் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க எந்த நடிகைக்கு தான் ஆசை இருக்காது. பெரும்பாலும் பேட்டிகளில் பங்கேற்கும் நடிகைகளிடம் விஜய் மற்றும் அஜித் பற்றி கேள்வி கேட்கப்படாமல் இருந்தது இல்லை. இந்நிலையில் தமிழ் சினிமா நடிகர்களில் உங்களுக்கு யார் மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு நடிகை மஞ்சிமா மோகன் பதிலளித்துள்ளார்.

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவன் இயகத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது மலையாளத்தில் ‘சம் சம் ‘ என்ற படத்திலும், தமிழில் ‘தேவராட்டம் ‘ என்ற படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

சமீத்தில் ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்தார் நடிகை மஞ்சிமா மோகன் தனது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களது அபிமான ஹீரோ யாரு என்று விஜய், அஜித், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மிகவும் சாதுரியமாக பதிலளித்த நடிகை மஞ்சிமா மோகன் எனக்கு 4 பெயரும் பிடிக்கும் என்று கூறி லாவகமாக எஸ்கேப் ஆகிவிட்டார். ஒரு வேலை இந்த 4 ஹீரோக்களுடன் நடிக்க விருப்பம் கொண்டதால் தான் பாரபட்சம் பார்க்காமல் 4 போரையும் தனக்கு பிடிக்கும் என்று கூறிவிட்டாரோ என்னமோ.