அன்றும் இன்றும் என்றும் நான் பிரபுதேவாவை காதலிக்கிறேன் என்று மஞ்சு வாரியர் கூறிய தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் பிரபு தேவா. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார். மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுகிறார்கள். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த தேள் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்கப்படவில்லை.
இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா, ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாரா மீது காதல் மலர்ந்தது. இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். இருந்தும் பிரபு தேவா, நயன்தாரா இடையே பிரச்சனை அதிகமாகி பிரிந்தார்கள்.
பிரபு தேவா குடும்ப விவகாரம்:
பின்னர் பிரபு தேவா தனியாக தான் வாழ்ந்து வந்தார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனிடம் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். மேலும், பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், நடிகர் பிரபு தேவா கடந்த செப்டம்பர் மாதமே திருமணம் செய்து விட்டார் என்று பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியானது. பிரபு தேவா முதுகு வலிக்காக பெண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுவந்து இருக்கிறார். அப்படியே இருவருக்கும் காதல் ஏற்பட்டதால் காதும் காதும் வைத்தது போல பிரபுதேவா திருமணத்தையே முடித்து விட்டார் என்று செய்திகள் வெளியானது.
பிரபுதேவாவின் இரண்டாம் திருமணம்:
அதோடு பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார். இந்த நிலையில் பிரபுதேவாவை நான் சிறு வயதிலிருந்தே காதலிக்கிறேன் என்று நடிகை மஞ்சுவாரியார் கூறிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மஞ்சுவாரியாரும், பிரபுதேவாவும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கும் நடனத்தின் மீது அதிக ஆர்வம் உள்ளவர்.
பிரபுதேவா- மஞ்சுவாரியர் புகைப்படம்:
இப்படி ஒரு நிலையில் ஆயிஷா என்ற படத்திற்காக மஞ்சுவாரியருக்கு நடனம் கற்றுக் கொடுக்க தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பிரபுதேவாசென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், நடனத்தின் மீது காதல் கொண்டிருக்கும் இவர்கள் இரண்டு பேருமே ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை தாண்டி இவர்களுக்குள் வேறு ஒன்றும் இருக்கிறது. இது குறித்து நடிகை மஞ்சுவாரியர் கூறியிருப்பது, நான் நேசிக்கும் மிகப் பெரிய நட்சத்திரம் பிரபுதேவா. நான் லாலேட்டன், மம்முட்டி, ஷோபனா சேச்சி ஆகியோரின் ரசிகை தான்.
பிரபுதேவா மீது இருக்கும் காதல் குறித்து மஞ்சுவாரியர் கூறியது:
ஆனால், என்னுடைய இளம் வயதில் நான் ஒருவருக்கு கடிதம் எழுத வேண்டும் என்று நினைத்தால் என்றால் அது பிரபுதேவாவுக்கு தான். பிரபுதேவா மீது எனக்கு காதல் இருப்பது என்னை தனிப்பட்ட முறையில் அறிந்த அனைவருக்கும் தெரியும். அந்த காதல் அன்றும் இன்றும் இருக்கிறது என்று பிரபுதேவா மீது கொண்ட காதலை வெளிப்படையாக மஞ்சு வாரியார் சொல்லியிருக்கிறார். இப்படி மஞ்சுவாரியர் கூறியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பிரபு தேவா தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.