பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த மனோரமா . ஆனால், அவரோ இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

0
65711
manorama
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகச் சிறந்த பழம் பெரும் நடிகை மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் நடிகை மனோரமா அவர்கள் “ஆச்சி” என அன்போடு அழைக்கப்பட்டார். நடிகை மனோரமா அவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னார் குடியில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் கோபி சாந்தா. இவருடைய பனிரெண்டாவது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் தான் இவருக்கு “மனோரமா” எனப் பெயர் சூட்டினர். ஆரம்பத்தில் இவர் “வைரம் நாடக சபா” நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். பின் இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து உள்ளார். மனோரமா அவர்கள் முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். அதற்கு பின் இவர் படங்களில் பிசியாக நடித்து வந்தார்.

-விளம்பரம்-
Image result for actress manorama

- Advertisement -

நடிகை மனோரமாவின் இறப்பு ஒட்டு மொத்த திரையுலகையே கதிகலங்க வைத்தது. இவருடைய இறப்பு இப்போது வரை கூட யாராலுமே ஈடு கட்ட முடியாது. மேலும், நடிகை மனோரமா அவர்கள் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, டாக்டர் பட்டம் போன்ற பல விருதுகளை தன்னுடைய நடிப்புத் திறமைக்கு வாங்கி உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இதனால் இவரின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. மன்னார் குடியில் பிறந்து இந்த அளவிற்கு சினிமா உலகில் மாபெரும் கலைஞராக உருவெடுத்து இருக்கிறார். நடிகை மனோரமா தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவில் உள்ள பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா உலகையே அண்ணாந்து பார்க்க வைத்தவர். ஆண்களுக்கு நிகராக தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்தவர் நடிகை மனோரமா. அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.

இதையும் பாருங்க : படு தோல்வி அடைந்த படத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பை பாராட்டிய நடிகை அமலா.

இவருக்கு தமிழ் மொழி மட்டும் தான் பேச தெரியும். இருந்தாலும் நடிகை மனோரமா அவர்கள் ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம் என ஆறு மொழி திரைப் படங்களில் நடித்து வந்தார். நடிகை மனோரமா அவர்கள் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து உள்ளார். இவரின் தனிப்பட்ட வாழ்வில் பல ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம் என பல இன்னல்கள் இவருக்கு ஏற்பட்டது. இவருடன் நாடகங்களில் நடித்த எம்.எஸ் ராமநாதன் என்பதை நடிகை மனோரமா காதலித்து வந்தார்.

-விளம்பரம்-
மனோரமா

பின் பெற்றோர்கள் எதிர்ப்பை தாண்டி 1964 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனோரமா அவர்கள் 1966 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இவர்கள் பிரிவிற்கு காரணம் மனோரமாசிறகு குழந்தை பிறந்த 11-வது நாள் குழந்தையைப் பார்க்க வந்த ராமநாதன், வரும் வழியில் ஜோசியம் பார்த்துவிட்டு வந்ததாகவும், பிறந்த இந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, மனோரமாவுடன் சண்டை போட்டார். அப்படி வீண் சண்டை போட்ட சில நாள்களிலேயே, ராமநாதன் மனோரமாவை விட்டுப் பிரிந்து செல்ல காரணமாக அமைந்தது. இவர்களுக்கு பூபதி என்ற ஒரு மகன் இருக்கிறார். அதோடு மனோரமா கணவர் இவரை விட்டு விலகி மறுமணம் செய்து கொண்டார். நடிகை மனோரமா அவர்கள் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் இறந்தார்.

Advertisement