தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் மீனா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது வரை இவர் படங்களில் கலக்கிக் கொண்டு வருகிறார். மேலும், இவர் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். சமீப காலமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.
இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மீனாவிற்கு இது ஒரு பெரிய இழப்பு என்றே சொல்லலாம்.மீனாவை இந்த இழப்பில் இருந்து மீட்டு வரும் முயற்சியில் அவருடைய நண்பர்களும் இருந்தனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீனா தேறி வருகிறார். இந்த நிலையில் ஒரு பிரபல சேனலுக்கு மீனா அவர்கள் பேட்டி ஒன்றுஅளித்து இருந்தார்.
அதில் அவர் கூறியிருந்தது, நான் கணவர் இறந்தவுடன் அந்த துன்பத்தில் இருந்து மீண்டும் வருவேன் என்று நினைக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அம்மா, குடும்பம், நண்பர்கள் தான்.அவர்களால் தான் நான் இப்போது அந்த துன்பத்திலிருந்து விடுபட்டு இருக்கிறேன். என் கணவர் ஹைதராபாத்தில் தங்கி இருந்த இடத்தில் புறாக்கள் அதிகமாக இருந்தது. அதன் எச்சத்தை சுவாசித்ததால் தான் அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிகுறி எதுவும் ஆரம்பத்தில் தெரியவில்லை. கொரோனா எங்கள் வீட்டில் எல்லோருக்கும் வந்தது.
ஆனால், எல்லோருக்கும் குணமாகிவிட்டது. அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இன்னும் பாதிப்பு அதிகமாக இருந்தது. அதனால் தான் இப்படி ஆகிவிட்டது. ஒருவேளை நுரையீரல் கிடைத்திருந்தால் கண்டிப்பாக என் கணவரை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், அப்படி நுரையீரல் கிடைக்கிறது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமாக ஒன்று.அப்படியே நுரையீரல் கிடைத்தாலும், அது ஆரோக்கியமாக இருக்கணும், உடல் எடை, உயரம் இவைகள் கூட பொருந்தணும் என்று மெடிக்கல் சார்ந்த நிறைய விஷயங்கள் இருக்கிறது.
இதெல்லாம் எனக்கு இதுவரை தெரியவே தெரியாது.20 வருடங்களுக்கு முன்பு நான் கண்தானம் செய்திருக்கிறேன். எல்லோரும் என் கண் அழகாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதனால் தான் நான் போன பிறகும் என்னுடைய கண்கள் பூமியில் இருக்கட்டும் என்று கண்தானம் செய்தேன். ஆனால், உறுப்பு தானம் செய்ததில்லை. நிறைய பேருக்கு இதைப் பற்றி இன்னும் தெரியவில்லை. உயிரைப் பறிகொடுத்த சமயத்தில் குடும்பத்தினரிடம் சென்று உடல் உறுப்பு தானத்தை பற்றி எடுத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
அதனால்தான் உடல் உறுப்பு தானம் பற்றி நிறைய பேருக்கு இனியாவது நாம் எடுத்து சொல்லணும். இது தெரிந்து கொண்டு பலரும் உறுப்பு தானங்களை செய்ய முன்வரணும். எல்லோருக்குமே கஷ்டங்கள் இழப்புகள் வரும் இது இயல்புதான். என்ன நடந்தாலும் பழசிலேஈ முடங்கி வருத்தப்படாமல் அடுத்த அடியை நல்லபடியாக எடுத்து வைக்க வேண்டும். நிகழ் காலம் மட்டுமே நிஜம். இதை ஊருக்கு மட்டும் உபதேசம் பண்ணக்கூடாது இந்த கணம் மட்டும்தான் கையில் அதை உங்களுக்காக வாழுங்கள் மறுபடியும் கிடைக்காத நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாக கழிப்போம் என்று கூறியுள்ளார்.