உரியமையை வாங்கிவிட்டு கமல் பதிலுக்காக காத்திருக்கும் ஸ்ரீபிரியா – பாபநாசம் 2வில் நடிப்பது குறித்து கேட்ட ரசிகருக்கு மீனாவின் பதில்.

0
882
meena
- Advertisement -

மலையாள சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகி இருந்தது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகிறது இந்த படம்.

-விளம்பரம்-

முதல் பாகத்தை போலவே திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.இரண்டாம் பாகத்தை தெலுங்கில் எடுத்து வரும் நிலையில் இரண்டாம் பாகத்தின் தமிழ் ரீ – மேக் உரிமையை நடிகை ஸ்ரீப்ரியா வாங்கி இருக்கிறார். இதனால் கமலை எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதற்கு கமல் பிடிகொடுக்கவில்லையாம். ஏற்கனவே கௌதமிக்கும் கமலுக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

இதையும் பாருங்க : படு மொக்கையாக சென்று கொண்டு இருக்கும் சூப்பர் ஹிட் சீரியலுக்கு முடிவு – வெளியான கிளைமாக்ஸ் காட்சியின் புகைப்படம்.

- Advertisement -

அதனால் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கௌதமி நடிப்பது சந்தேகம் என்பதால், ஒரிஜினல் திரிஷ்யம் படத்தில் நடித்த மீனாவையே வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம் என்று ஸ்ரீபிரியா கமலிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறாராம். இப்படி ஒரு நிலையில் ரசிகர் ஒருவர் பாபநாசம் 2வில் நடிப்பீர்களா என்று மீனாவிடம் கேட்டதற்கு அதற்கு அவர், கமல் சாரை கேளுங்கள் என்று கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க திரிஷ்யம் 2 படம் Ottயில் வெளியானதால் இந்த படத்தை லாக்டவுனில் தமிழ் ரசிகர்களும் பார்த்துவிட்டனர்.

இதனால் இந்த படத்தை தமிழில் எடுத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்காது என்று கமல் நினைக்கிறாராம்.அதே போல ‘பாபநாசம்’ படத்தின் க்ளைமேக்ஸிலும், ‘த்ரிஷ்யம்’ க்ளைமேக்ஸிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மலையாளத்தில் மோகன்லால் தவறை ஒப்புக்கொள்ளவே மாட்டார். ஆனால், தமிழில் கமல்ஹாசன் குற்றத்தை மறைமுகமாக ஒப்புக்கொண்டு பேசுவது போன்ற காட்சிகள் இடம்பிடித்திருக்கும். அதனால், தமிழில் பார்ட்-2 வுக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது என கமல்ஹாசன் நடிக்கத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. 

-விளம்பரம்-
Advertisement