என்ன புடிக்கலைல, உங்களுக்கு அஜித் தானே புடிக்கும்ன்னு விஜய் கேட்டாரு – அஜித் பட நடிகை பேட்டி.

0
4544
vijay-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. சூப்பர் ஸ்டார் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா அதன் பின்னர் அவர் படத்திலேயே கதாநாயகியாகி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினி, கமல் மட்டுமல்லாமல் அஜித், பிரசாந்த் என்று பல்வேறு நடிகைகளுடன் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் கன்னடம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் அஜித், விஜய் குறித்து நிறைய விஷயங்களைச் சொன்னார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, உங்களுக்கெல்லாம் தல ஆகுவதற்கு முன்னாடியே அவரை எனக்கு நல்லா தெரியும். அவர் எப்போதும் பைக், பைக் ரேஸ், ஸ்பீட் என்று நிறைய பேசுவார்.

- Advertisement -

நமக்கு அதைப் பத்தி எல்லாம் ஒண்ணுமே தெரியாது. அதோடு ஆர்வம் கிடையாது. அதனால் அவர் சொல்றதுக்கு ஓகே மட்டும் சொல்லுவேன். விஜய் பத்தி சொல்லவேண்டும் என்றால் என்னால் விஜய் கூட படம் பண்ண முடியவில்லை. அப்போது எனக்கு கால்ஷீட் கிடைக்காமல் போனது. ஆனால், அவருடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருக்கேன். அப்ப ஒரு முறை விஜய் என்னிடம் உங்களுக்கு என்ன புடிக்கல தானே. உங்களுக்கு அஜித் தானே பிடிக்கும்.

அதனால தான் என்னை கூட படம் பண்ணலன்னு சொல்லுவாரு. விஜய் கூட நடிக்க கிடைச்சா ஓகே தான். இதை அவரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது ரஜினிகாந்த் படத்தில் மீனா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பு, மீனா நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு வெற்றி அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார்.

-விளம்பரம்-
Advertisement