தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பின் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் என்று பிசியாக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் நடிகை மீனா அவர்கள் சமீபத்தில் நடிகர் ஜெகபதி பாபு தொகுத்து வழங்கும் ஜெயம்மு நிச்சயம் மூரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இதில் மீனா அவர்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருந்தார். அப்போது நிகழ்ச்சியில் மறைந்த நடிகை சௌந்தர்யா காண்பித்து இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தில் சௌந்தர்யா போலீஸ் உடையிலும் அவருடைய அருகில் மீனாவும் இருந்தார்.
மீனா குறித்த தகவல்:
அதை பார்த்தவுடன் மீனா, சினிமாவில் எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான போட்டி தான் இருந்தது. சௌந்தர்யா ஒரு அற்புதமான நடிகை. எனக்கு நல்ல தோழி. அவருடைய இறப்பு செய்தி கேட்டு நான் ரொம்பவே அதிர்ச்சி அடைந்தேன். அன்று பிரச்சாரத்திற்கு சௌந்தர்யாவுடன் நானும் போக வேண்டி இருந்தது. பிரச்சாரத்திற்கு என்னையுமே கூப்பிட்டார்கள். ஆனால், எனக்கு அரசியல் பிரச்சாரம் எல்லாம் பிடிக்காது.
https://www.youtube.com/watch?v=Y2Rupqj8KGg
சௌந்தர்யா பற்றி சொன்னது:
அதனால் நான் படப்பிடிப்பு இருப்பதாக சொல்லி தான் மறுத்து விட்டேன் என்று கூறியிருந்தார். அதற்குப் பின் நிகழ்ச்சியில் மீனா, தன்னுடைய சினிமா பயணம், குடும்பம், கணவர் குறித்து பகிர்ந்து இருந்தார். மேலும், நடிகை மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மீனாவின் கணவர் கடந்த 2023 ஆண்டு உடல்நிலை பிரச்சனை காரணமாக இறந்தார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் இருக்கிறார். நைனிகா தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது மீனா திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சௌந்தர்யா குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டடங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சௌந்தர்யா. இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். இவர் பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து விட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தன் அண்ணன் உடன் சிறிய விமானத்தில் சென்று இருந்தார். திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சௌந்தர்யா அவர்கள் அநியாயமாக உயிரிழந்தார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரின் இழப்பு தென்னிந்திய சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.






