நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை.தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர்.
கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதே போல பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழில் லீ, அ ஆ போன்ற படங்களில் நடித்த நிலா என்ற மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக்கொள்ள போலியான அடையாள அட்டையையை சமர்பித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதையும் பாருங்க : ரஜினி, விஜய், அஜித் என்று பல படங்களின் நடித்த ரமேஷ் திலக் – முதன் முறையாக ஷேர் செய்த மகனின் புகைப்படம்.
சமீபத்தில் நடிகை மீரா சோப்ரா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். ஆனால், தற்போது தானேவில் தற்போது மாநகராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்டோர்க்கு மட்டும் தான் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும், மீரா சோப்ரா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்க்காக தான் முன்கள பணியாளர் என்று போலியான அடையாள அட்டையை கொடுத்துள்ளார் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் தான் மீரா சோப்ராவின் உறவினர்கள் இருவர் கொரோனா தொற்றால் காலமாகி இருந்ததனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர் “என்னுடைய நெருங்கிய உறவினர்கள் இருவர் மரணமடைந்துவிட்டனர். இது கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணம் அல்ல; நம்முடைய தோற்றுப்போன மருத்துவக் கட்டமைப்பினால் செய்யப்பட்ட கொலை. நம் நாட்டில் மட்டும்தான் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். நிலைமை அச்சுறுத்துகிறது” என்று பதிவிட்டு இருந்தார். மீரா சோப்ராவின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
நடிகை மீரா சோப்ராவின் மறைந்த உறவினர்களில் ஒருவர், இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைக்காமல் அவதிப்பட்டதும், மற்றொருவர் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்கள பணியாளர் என்று போலியான ஆதாரத்தை கொடுத்து தடுப்பூசி போட்டுக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.