ஊரடங்கு நேரத்தில் கிளாமர் போஸாக அள்ளி வீசி வரும் நடிகை நிலா அலைஸ் மீரா.

0
20418
meerachopra
- Advertisement -

தமிழ் சினிமாவை பொறுத்த வரை அழகும், திறமையும் தாண்டி லக் என்ற விஷயமும் அமைந்தால் மட்டுமே நிலைக்க முடியும் என்பது ஆணித்தனமான உண்மை. சினிமாவில் அறிமுகமான அழகான நடிகைகள் சிறிது காலத்திலேயே காணாமல் போய் விடுகின்றனர். அந்த வகையில் இவரும் ஒருவர். தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான எஸ்.ஜே. சூர்யா இயக்கி நடித்த படம் அன்பே அருயிரே. அந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவால் காதநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை நிலா. ஆனால் இவரது இயற்பெயர் மீரா சோப்ரா

-விளம்பரம்-

டெல்லியில் பிறந்த இவர் பிரியங்கா சோப்ரா குடும்பத்தை சார்ந்தவர். பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா,மனாரா சோப்ரா ,பரிநிதி சோப்ரா ஆகியோருக்கு கசின் ஆவார். இவ்வளவு பிரபலங்களின் சகோதரியாக இருந்தும் இவரது சினிமா வாழ்விற்கு யாரும் உதவ வில்லை. சமீபத்தில் கூட ஒரு விழா ஒன்றுல் பங்கேற்ற பரிநிதி சோப்ரா மீரா சோப்ரா என்னோடய கசிநே இல்லை இன்று கூறினார்.

- Advertisement -

அதற்கு ரசிகர்கள் பலரும் என்னதான் மீரா சோப்ரா பிரபலமாக இல்லை என்றாலும் அதற்க்கென்று அவரை உறவினரே இல்லை என்றா கூறுவது என்று பலரும் வருந்தினர். அன்பே அருயிரெ படத்திற்கு பின்னர் தமிழ்,தெலுகு ,ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த மீரா சோப்ரா. தமிழில் மருதமலை, ஜாம்பவான், லீ என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவும் இல்லை பட வாய்ப்புகள் அதிகம் வரவும் இல்லை. இறுதியாக எஸ் ஜே சூர்யா இயக்கி நடித்த இசை படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் கில்லாடி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுக்கிறார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Signs of insomnia, putting a pic at 5.30am!!! ?

A post shared by Meera Chopra (@meerachopra) on

அந்த வகையில், கொரோனா ஊரடங்கில் நானும் யோக செய்கிறேன் என்று யோகா செய்யம் வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகை மீரா சோப்ரா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஹிந்தியில் அர்ஜுன் ராம்பல் நடித்துள்ள நாஸ்டிக் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த அக்டோபர் மாதமே வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னும் வெளியாகவவில்லை. இந்த படத்தில் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement