பிரபல நடிகை மேகா ஆகாஷின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிய வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது உள்ள பல இளம் நடிகைகளில், மேகா ஆகாஷ் இளம் ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் 2017 ஆம் ஆண்டு 'லை' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகம் ஆனார். அதற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'பேட்ட' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதற்குப் பிறகு, நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த 'வந்தா ராஜாவா தான் வருவேன்' படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. பின், தனுஷ் நடிப்பில் வெளியான 'என்னை நோக்கி பாயும் தோட்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், அந்த படத்தில் இடம்பெற்ற 'மறுவார்த்தை பேசாதே' என்ற பாடல் பயங்கரமாக ஹிட் ஆனது. இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
மேகா ஆகாஷ் திரைப்பயணம்:
பின்னர் சில நாட்கள் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர், அசோக் செல்வனுடன் சேர்ந்து 'சபாநாயகன்' படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு கடந்த நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக, இவர் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி வெளியான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தெலுங்கு படங்கள்:
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஒரு சில ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் டியர் மேகா, ராஜராஜ சோரா, பிரேமதேசா, ராவனசுரா போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தது. தற்போது இவர், ஒரு சில தெலுங்கு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தாலும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில் இவருக்கு எந்த படங்களும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேகா ஆகாஷ் நிச்சயதார்த்தம்:
தற்போது நடிகை மேக ஆகாஷ் திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்ற செய்தி தான் வைரல் ஆகியுள்ளது. அதாவது இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவை கரம் பிடிக்க உள்ளார். அவர்களின் திருமணத்திற்கு குடும்பத்தார் சம்மதம் சொன்னதனால் மேகா ஆகாஷ் மற்றும் சாய் விஷ்ணு நிச்சயதார்த்தம் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இவர்களின் நிச்சயதார்த்தம் கேரளாவில் சிம்பிளாக நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
View this post on Instagram
மேகா ஆகாஷ் பதிவு:
தற்போது மேகா ஆகாஷ், தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் , என் ஆசை நிறைவேறியது. இதற்குப் பிறகு காதல், சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை தான் எப்போதும். எனது வாழ்க்கையின் காதலுடன் நிச்சயதார்த்தம் என்று குறிப்பிட்டு, தனது காதலன் சாய் விஷ்ணுவுடன் எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது மேகா ஆகாஷின் பதிவைப் பார்த்து பிரபலங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






