சத்தமில்லாமல் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மின்னல் தீபா – மாப்பிள்ளை தான்.

0
1852
minna

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த மாயி படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்கச் செல்லும் போது ‘வாம்மா மின்னல்’ என்ற டயலாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா. இதனால் அனைவரும் இவரை ‘மின்னல் தீபா’ என்று தான் அழைக்கிறார்கள். இந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறைவே தொடங்கியவுடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார்.

View this post on Instagram

?????

A post shared by deepa (@minnaldeepa) on

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி தொடரில் தீபா நடித்து வருகிறார். யாரடி நீ மோகினி சீரியலில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் மின்னல் தீபா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடிகை மின்னல் தீபாவிற்கு சுப்பிரமணி என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக தீபாவின் வீட்டிலேயே மிகவும் எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கின்றனர். தனது திருமண புகைப்படங்களை தீபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை தீபாவிற்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை தீபா கடந்த 2013 ஆம் ஆண்டே ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ரமேஷ் ஒரு உதவி நடன இயக்குனர்.நடிகை தீபா ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ரமேஷ்ஷுடன் ஏற்பட்ட காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement