இனிமே அம்மா, அக்கா ரோல் தானா – குழந்தை பிறந்த பின் மியா வெளியிட்ட புகைப்படம் – ஷாக்கான நெட்டிசன்கள்.

0
3311
miya
- Advertisement -

தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-

தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா.குடும்பப் பாங்கான தோற்றம் இருந்தபோதும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. இருப்பினும் மலையாளத்தில் ஒரு தரமான நடிகையாக விளங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : பார்ட்டி, பீச்,மாடர்ன் உடை. 50 வதிலும் கிளாமரில் அலம்பல் செய்யும் மதுபாலா.

- Advertisement -

நடிகை மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்தஆண்டு மே 30 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் மாதம் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதை திடீரென்று அறிவித்து இருந்தார் மியா. குழந்தை பிறந்த பின்னர் தன்னுடைய எந்த சமீபத்திய புகைப்படத்தை பதவிடாமல் இருந்தார் மியா.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். அதில் முன்பை விட மியா பப்லியாக இருப்பதை கண்டு ரசிகர்கள் சிலர் ஷாக் ஆகி இருந்தனர். அதில் ஒரு ரசிகர் இனிமேல் அம்மா, அக்கா ரோல் தானா என்று கேலி செய்துள்ளார். ஆனால், பெரும்பாலான ரசிகர்கள் மியா சப்பியாக மாறினாலும் இன்னும் அழகாக மாறி இருப்பதாக கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement