தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மியா ஜார்ஜ். தமிழில் நடிக்க வருவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் 2010ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார்.
ஆரம்பகாலத்தில் ஜிமி ஜார்ஜ் என்ற தனது சொந்த பெயரை திரைப்படத்திற்காக மியா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த இன்று நேற்று நாளை, சசிகுமார் நடித்த வெற்றிவேல், ரம், எமன் போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார் மியா. மேலும், இவர் மலையாளத்தில் ஒரு சில குறும்படங்களிலும் நடித்துள்ளார்.
குடும்பப் பாங்கான தோற்றம் இருந்தபோதும் தமிழில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தபாடில்லை. இருப்பினும் மலையாளத்தில் ஒரு தரமான நடிகையாக விளங்கி வருகிறார். மலையாளத்தில் இதுவரை 25 படங்களுக்கு மேல் நடித்துள்ள மீனா தற்போது மலையாளத்தில் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்து நடித்து வருகிறார்.
தமிழில் இறுதியாக 2017 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான எமன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் பின்னர் தமிழில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகை மியா ஜார்ஜிற்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் கடந்த மே 30 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், இவர்கள் திருமணம் செப்டெம்பர் மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மியா தனது வருங்கால கணவருடன் எடுத்த சில புகைப்படங்களையும் நிச்சயதார்த்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.