பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக மிருணாள் தாக்கூர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளிவந்த சீதாராமம் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதை அடுத்து இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். அதோடு இவர் ஹிந்தி மொழியில் தான் நிறைய கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் மிருணாள் நடித்த படம் சன் ஆப் சர்தார் 2.

இதை அடுத்து இவர் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவரும் தனுஷும் காதலிக்கிறார்கள் என்று வதந்திகள் பரவியது. பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை அடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள், திருமணம் செய்ய போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது. பின் பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு சகோதரர்.
மிருணாள் தாக்கூர் குறித்த தகவல்:
எங்கள் இருவரையும் பற்றி நிறைய வதந்திகள் பரவிருப்பது எனக்குமே தெரியும். அதை பார்த்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது என்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் காதலைப் பற்றி நடிகர் மிருணாள் தாகூர் கூறியது, காதல் என்பது ஒரு அழகான உணர்வு. இந்த பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அந்த விஷயம் நடக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். காதல் உங்களை ஒரு சிறந்த மனிதராக மாற்றுகிறது. இது உண்மையில் உங்கள் உள் பிரச்சனைகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் சரி செய்யும்.

மிருணாள் தாக்கூர் பேட்டி:
காதல் உலகின் மிக அழகான விஷயம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் காதலை கண்டுபிடிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். யாராவது ஒருவர் காதலிக்கும் போது அந்த நபர் பெண், ஆண் என்று பார்க்காமல் குறிப்பிட்டதக்க விஷயங்களை செய்ய நினைக்கிறார்கள். காதலில் இருப்பவர் அதிகம் அன்பை கொடுப்பார். ஆனால், காதலில் முக்கியமானது அதையும் ஏற்றுக்கொள்வதுதான்.

காதல் பற்றி சொன்னது:
சில சமயங்கள் அன்பை பெறுவதும் அன்பை அங்கீகரிப்பதும் ரொம்பவே கஷ்டம். அன்பின் வரையறை மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், காதல் மட்டும் நிலையானது. நீங்கள் அதை எப்படி பெறுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒரு காதலன் ஒரு காதலி இருக்கும் போது அவர்கள் அன்பை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். ஆணா அல்லது பெண்ணா என்பது ஒரு பொருட்டல்ல. காதல் இருக்கும்போது நீங்கள் காதலிக்கும் நபருக்கான விஷயங்களை செய்யுங்கள். நீங்கள் அவருடன் சரணடையுங்கள் என்று கூறியிருக்கிறார்.






