37 ஆண்டுக்கு பின் தன் படத்தில் நடித்த சிறுவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்ட நதியா. (அந்த பசங்க வயசான மாதிரி ஆகிட்டாங்க, ஆனா நதியா)

0
946
nadhiya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நதியா. இவருடைய இயற்பெயர் சரீனா அனூஷா. இவர் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பின் 2004 ஆம் ஆண்டு முதல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவருடைய பூர்வீகம் கேரளா. அப்பா என்.கே.மொய்து. கேரளாவின் தல சேரியை சேர்ந்த முஸ்லிம். அம்மா லலிதா திருவல்லாவை சேர்ந்த இந்து. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். மேலும், 1984 ஆம் ஆண்டில் பாசில் தனது நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு என்ற திரைப்படத்தில் நதியாவை அறிமுகப்படுத்தினார்.

-விளம்பரம்-

ஷரீனா மொய்து என்ற இவரது பெயர் சினிமாவுக்கு சரியாக இருக்காது என்று நதிபோல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பொருளில் நதியா என்று இவருக்கு பெயர் வைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக மாறியது. மேலும், நோக்கத்தா தூரத்து கண்ணும் நட்டு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதில் மோகன்லால் நடித்திருந்தார். அதனை தான் தமிழில் பூவே பூச்சூடவா என்ற பெயரில் பாசில் ரீமேக் செய்தார். இந்த படம் வெளியாகும் முன்பே மலையாளத்தில் நதியா பல படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

90ஸ் ரசிகர்களின் கனவுக்கன்னி :

இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே நதியா ஆண்களின் மனதில் மட்டுமின்றி பெண்கள் மத்தியிலும் புகழ் பெற்றார். நதியாவின் கண்ணியமான தோற்றம், துடிப்பான நடிப்பு, நவநாகரிக உடைகள், ஹேர் ஸ்டைல் என அனைத்தும் பெண்கள் மத்தியில் பேசு பொருளானது. அதுமட்டும் இல்லாமல் 90 காலகட்டத்தில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லித் தான் பொருள் விற்பார்கள். அந்த அளவிற்கு நதியா மிக பிரபலமான நடிகையாக இருந்தவர்.

This image has an empty alt attribute; its file name is 1-118-819x1024.jpg

எவர் கிறீன் நடிகை :

பின் இவர் 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண்கள் உள்ளனர். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் நதியா மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

நதியா பகிர்ந்த புகைப்படம் :

அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும், தமிழ் சினிமாவில் பெண்களிடையே உடைக்காவும், ஸ்டைலாக்கவும், தோற்றத்துக்காகவும் புகழ் பெற்ற முதல் நடிகை என்ற பெயர் எடுத்தவர்.நதியாவை ஏன் எல்லாரும் எவர் கிறீன் நடிகை என்று அளிக்கிறார்கள் என்பதற்கு இந்த ஒரு புகைப்படம் போதும்.நடிகை நதியா மற்றும் மோகன் லால் நடிப்பில் 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ‘Nokkethadhoorathu Kannum Nattu‘ இதே படம் தான் தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டும் வெளியானது.

This image has an empty alt attribute; its file name is 2-18-741x1024.jpg

37 ஆண்டுக்கு பின் சந்தித்த நதியா :

இப்படி ஒரு நிலையில் Nokkethadhoorathu Kannum Nattu படத்தில் நடித்த சிறுவர்களின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் நிதியா. Nokkethadhoorathu Kannum Nattu வெளியாகி 37 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்தில் சில சிறுவர்கள் நடித்து இருப்பார்கள். இந்த நிலையில் அந்த படத்தில் நடித்த சிறுவர்களுடன் தற்போது நதியா புகைப்படம் எடுத்துள்ளார். அதில் சிறுவர்களாக நடித்த நபர்கள் வயதாகி கொஞ்சம் காணப்படுகின்றனர். ஆனால், அவர்களை விட நதியா இன்னமும் இளமையாக இருக்கிறார்.

Advertisement