ஜெயலலிதா குறித்து நடிகை நளினி அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகையாக இருந்தவர் நளினி. இவர் 80 களில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கி இருக்கிறார். அதிலும் இவர் நடித்த நூறாவது நாள் ,24 மணி நேரம் போன்ற படங்கள் எல்லாம் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. மேலும், இவர் 1985 களில் மட்டும் 18 படங்களில் நடித்து இருக்கிறார்.

1990 களுக்கு பிறகு சினிமாவில் நளினி அதிகம் இல்லை. இவர் 1980 களின் கிராமத்து ரசிகர்களின் மன்னன் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் இவர் சினிமாவில் அவ்வப்போது வந்தார். பின் நளினி சின்னதிரையில் சின்ன பாப்பா, பெரிய பாபா சீரியல் மூலம் மீண்டும் பிரபலமானர். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர் ஒருவர் மகன் அருண் மற்றொரு மகள் அருணா. தற்போது நளினி கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

Advertisement

நளினி அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நளினி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரையுலக அனுபவம் குறித்தும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்தும் கூறியிருப்பது, ஜெயலலிதா அம்மா எனக்கு ரொம்பவும் நெருக்கம். அவர் என்னிடம் குழந்தை மாதிரி பழகுவார். என்னுடைய குழந்தைகளுக்கு புத்தகம் பிடிக்கும் என்பதால் அவர் நிறைய புத்தகங்களை கொடுத்திருக்கிறார். அவரை வெளியே இருந்து வேறொரு ஆளாகவும் நான் பார்த்து இருக்கிறேன். அருகில் இருந்து அவருடைய குழந்தைத்தனத்தையும் ரசித்திருக்கிறேன்.

நளினியின் நிலை:

ஒரு நாள் ஜெயலலிதா அம்மா வீட்டில் இருந்து வந்த போன் கால் அழைப்பை என்னால் மறக்கவே முடியாது. திடீரென்று போன் செய்து உடனே கிளம்பி வாருங்கள் என்று சொன்னார்கள். என்னுடைய முன்னாள் கணவர் ராமராஜன் அப்போது வீட்டில் இல்லை. அவருக்கும் தகவல் சொல்லிவிட்டு ஜெயலலிதாவிற்கு பிடித்த ஸ்வீட்ஸ்களை வாங்கிக்கொண்டு போயஸ் கார்டனுக்கு சென்றேன். அந்த சமயத்தில் எங்களுக்கு நிறைய பிரச்சனை இருந்தது. தியேட்டர்களை மூடிவிட்டதால் நாங்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தோம்.

Advertisement

ஜெயலலிதா கொடுத்த சர்ப்ரைஸ்:

அதனால் எங்களுக்கு ஏதாவது உதவி பண்ண முடியுமா? என்று அவரிடமே சிலமுறை கேட்டிருந்தேன். ஒருவேளை அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்ற குழப்பத்தோடு நான் சென்றேன். பின் உள்ளே போனதும் நான் ஜெயலலிதா அம்மாவிடம் ஸ்வீட்ஸ் கொடுத்தேன். நீ எனக்கு ஸ்வீட் கொடுக்கிறாயா, நானும் உனக்கு ஒரு ஸ்வீட்டான விஷயத்தை சொல்கிறேன் என்றார். நான் கடனை எல்லாம் அடைப்பேன் என்று சொல்லப்போறாரோ என்று படபடப்போடு இருந்தேன். அப்போது அவர், உங்க வீட்டுக்காரரை திருச்செந்தூர் தொகுதி எம்பி ஆகப் போறேன் என்று சொன்னார்.

Advertisement

சந்தோஷத்தில் நளினி:

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னுடைய வீட்டுக்காரரும் எதுவும் புரியாமல் முழித்தார். பின் என்னம்மா சொல்றீங்க என்று கேட்டேன். நான் முடிவெடுத்து விட்டேன். நீங்க தான் திருச்செந்தூர் தொகுதி எம்பி என்றார். எனக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டது. பின் இந்த விஷயத்தை நான் அடுத்த மாதம் இறுதியில் அறிவிக்கிறேன். அதுவரை யாருக்கும் தெரியக்கூடாது. யாருக்காவது தெரிந்தால் சீர் தர மாட்டேன் என்று கூறியிருந்தார். சந்தோஷத்தில் எங்களுக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை.

வாழ்கை கொடுத்த ஜெயலலிதா:

பின் நாங்கள் வீட்டிற்கு போனோம். யாரிடமும் சொல்லக்கூடாது என்பதற்காக அடுத்த ஒரு மாதத்திற்கு நாங்கள் இருவருமே எங்கேயுமே செல்லவில்லை. பின் தேர்தல் நேரத்தில் ஏதாவது பணம் போதவில்லை என்று சொன்னால் நீ ஏன் கவலைப்படுகிற நான் பார்த்துகிறேன் என்று அவரை ஜெயிக்க வைத்து எம் பி ஆக்கி அழகு பார்த்தார் ஜெயலலிதா அம்மா. எங்களுக்கு அவர் வாழ்க்கை கொடுத்தார். ஆனால், ஜெயலலிதா அம்மா மருத்துவமனையில் இருந்தபோது நான், விஜயசாந்தி, அவருடைய பி ஏ மூவரும் விமானத்தில் சென்று கொண்டிருந்தோம்.

ஜெயலலிதா இறப்பு:

அப்போ திடீரென அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. எனக்கு தலை சுற்றி அப்படியே உட்கார்ந்து விட்டேன். அதற்கு பின்னல் தான் அது பொய்யான செய்தி என்று தெரிந்தது. பின் சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தில் வாரங்கள் வனப்பகுதியில் சூட் செய்து கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் இறந்த செய்தி எங்களுக்கு வந்தது. ஒரு நாள் முழுவதும் அப்செட் ஆகவே இருந்தேன். அவர் இறந்து விட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் என்னோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று கூறியிருந்தார்.

Advertisement