தன்னுடைய உடல் எடைக்கு காரணம் இதுதான் என்று நடிகை நளினி அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நளினி. இவர் ராமராஜன், கார்த்தி, மோகன் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பக்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.
பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியுடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் வெள்ளி திரையில் குணச்சித்திர வேடங்களிலும் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பல நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜனை 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
நளினி திருமணம்:
திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறந்தது. அதற்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். பிரிவிற்கு பின் இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகை நளினி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய உடல் எடை குறித்து கூறியிருந்தது, எனக்கு குண்டாக இருப்பது தான் ரொம்ப பிடிக்கும். நான் குண்டாக இருப்பதற்காக ஸ்டிராய்டு போட்டு கொண்டேன்.
நளினி அளித்த பேட்டி:
இந்த உடல் அமைப்பு தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருந்தார். இப்படி நளினி ஸ்டீராய்டு போட்டு தான் உடம்பை குண்டக்கினார் என்று பேட்டியில் கூறியிருந்தது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பலரும் கேள்வி கேட்டிருந்தார்கள். பின் இது குறித்து நளினி சொன்னது, ஐவிஎஃப்ன்னு சொல்லப்படுகிற செயற்கை கருத்தரிப்பு முறையில் தான் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தார்கள். 80 களின் இறுதியில் தான் இதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டேன். ஐ வி எஃப் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் தான் இந்த ஸ்டீராய்டு ஊசியைப் போட்டுப்பாங்க.
குண்டாக இருக்க காரணம்:
இந்த சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் பலருக்குமே இயல்பாகவே உடல் எடை அதிகரிக்கும். இது என்னுடைய விஷயத்திலும் உண்மையானது. ஹீரோயினியா நடித்த போது ஒல்லியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உணவு விஷயத்தில் நான் ரொம்பவே கட்டுப்பாடாக இருந்தேன். கல்யாணத்திற்கு பிறகு நடிப்பது நிறுத்திவிட்டு ஹோம் மேக்கராக இருந்தேன். அதனால் பெருசாக கட்டுப்பாடு இல்லாமல் பிடித்த உணவுகள் எல்லாம் சாப்பிட ஆரம்பித்தேன். அதனால்தான் வெயிட் போட்டேன்னு சொல்ல முடியாது. உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தது. இந்த காரணத்தை தான் நீங்கள் சொல்ற யூடியூப் சேனல் பேட்டியில் கூறியிருந்தேன்.
உடல் எடை குறித்து சொன்னது:
மத்தபடி என்னுடைய உடல் எடையை அதிகரிக்க திட்டமிட்டு நான் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. உடல் எடை அதிகமாக இருந்தால் சுறுசுறுப்பாக இயங்க முடியாது என்று பலரும் சொல்வார்கள். ஆனால், எனக்கு அதில் உடன்பாடு இல்லை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நான் ஹீரோயினியா நடித்த போது இருந்த அதே உற்சாகத்துடன் தான் நான் இப்பவும் இருக்கிறேன். அதே போல் தான் இப்பவும் நான் வேலை செய்து கொள்கிறேன். என் உடல் எடையை குறித்து ஒருபோதும் நான் வருத்தப்பட்டதில்லை. என் உடலமைப்பை பற்றி மத்தவங்க சொல்லும் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்று கூறியிருந்தார்.