தன்னுடைய திருமணத்தில் நடந்த சம்பவம் பற்றி நடிகை நமீதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் நமீதா. ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர். தமிழில் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம்தான் நமிதா அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் சினிமாவில் அறிமுகமான கொஞ்ச நாட்களிலேயே இளைஞர்களின் மத்தியில் தனக்கென்ன ஓர் இடத்தை பிடித்து விட்டார். அதன் பின், இவர் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பாவல் தன் பக்கம் இழுத்தார். அதோடு இவர் அனைவரையும் ‘மச்சான்’ என்றுதான் செல்லமாக அழைப்பார்.
நமீதா குறித்த தகவல்:
அதனால் இவர் இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவுக்கு பிரபலமானார் என்று சொல்லலாம். பின், உடல் எடை கொஞ்சம் அதிகரித்த பிறகு நமிதாவிற்கு சினிமா பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்தார். அதன்பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்குமா? என்று காத்திருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் நமிதாவிற்கு பெரிதாக சினிமா பட வாய்ப்புகள் அமையவில்லை.
நமீதா திருமணம்:
பின், இவர் 2017 ஆம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர சௌவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இரட்டை ஆண்டு குழந்தைகள் பிறந்தது. இதற்கிடையே சொந்தமாக ஓடிடி தளத்தை நடிகை நமிதா வைத்திருக்கிறாராம். தற்போது இவர் டிவி நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
நமீதா பேட்டி:
இந்த நிலையில் தன்னுடைய திருமணத்தில் நடந்த சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் நமிதா சொன்னது, நான் முதன்முதலாக என்னுடைய கணவரை பார்க்கும் போது நல்ல உடல் தோற்றத்துடன் இருந்தார். நான் தான் அவரைப் பார்த்தேன். ஆனால், அவர் என்னை கண்டு கொள்ளவே இல்லை. அவர் ரொம்ப அமைதியான கேரக்டர். ஆனால், நான் அவருக்கு ஆப்போசிட். கல்யாணத்திற்கு பிறகு என்னை நான் மாற்றிக் கொண்டேன். அவர் தான் எனக்கு கிடைத்த வைரம் என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்.
திருமணத்தின் போது நடந்தது:
அதேபோல் எங்களுடைய திருமணம் திருப்பதில் தெலுங்கு முறைப்படி தான் நடந்தது. அந்த திருமணத்தின்போது என்னுடைய தலையில் வெற்றிலை, சீரகம் போன்ற மங்கள் பொருட்களை எல்லாம் வைத்தார்கள். ஆனால், நான் அதை குப்பை என்று நினைத்து குப்பை தொட்டியில் போட்டு விட்டேன். அதற்குப்பின் எங்கே அந்த வெற்றிலை என்று கேட்டார்கள்? உடனே நான் குப்பைத்தொட்டியில் போட்டு விட்டேன் என்று சொன்னேன். பின் அந்த வெற்றிலையை மீண்டும் குப்பைத் தொட்டியில் இருந்து எடுத்து என் தலையில் வைத்தார்கள். அப்படி செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கூறியிருக்கிறார்.