தமிழ் சினிமா வரலாற்றிலேயே பொன் மகுடம் சூடிய அழகி படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் வெளிவந்த பிரபலமான படங்களில் ஒன்றாக அழகி படம் திகழ்கிறது. இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது.
மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்லும். இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பார்க்க வைக்கும் டைரி போல பள்ளி காதல், வாழ்வின் மீது ஏற்படும் தாக்கம் என பல விஷயங்களை காவியமாக சொன்ன படம் அழகி. இன்றும் இளைஞர்களால் பாராட்டப் படக்கூடிய அழகி படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் படக்குழுவினர் அனைவரும் கொண்டாடி இருந்தார்கள். பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அழகி பட டீவ்ட் :
மேலும், இதுகுறித்து இந்த படத்தில் நடித்த பல பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நந்திதா தாஸ். தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நந்திதாதாஸ். இவர் நடிகை மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும், இவர் முதன்முதலாக இயக்கிய ஃபிராக் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இந்த படம் மூலம் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. இவர் முதன்முதலாக நாடக குழுவில் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.
நடிகை நந்திதா தாஸ் நடித்த படங்கள்:
அதற்குப் பிறகு இந்தியில் பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இருந்தாலும் இவரை தமிழில் வெளிவந்த அழகி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படி ஒரு நிலையில் அழகிபடம் இன்றோடு வெளி வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நந்திதா தாஸ் தன்னுடைய மகிழ்ச்சியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நந்திதா தாஸ் போஸ்ட்:
அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்துவிட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கண்ணாடி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்தது நம்பமுடியவில்லை. அழகி நினைவுகள் இன்னும் பசுமையாகவே என் மனதில் உள்ளது. இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் தங்கர் பச்சனுக்கு நன்றி. அதேபோல் என்னுடன் நடித்த அற்புதமான நடிகர்களான பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே என்று பல பேருக்கும் நன்றி.
என்னுடைய ஒரே வெற்றிப் படம் என்றால் அழகி தான். அதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜா உடைய பாடல்கள். என்றென்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இசையை தந்ததற்காக அவருக்கும் நன்றி. மீண்டும் அழகி 2 படம் எடுக்கப்பட்டு அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த பழைய மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பார்த்திபன் டீவ்ட்:
அதுமட்டுமில்லாமல் நடிகர் பார்த்திபனும் அழகி படம் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், “அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா,தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க… அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு என்று பதிவிட்டிருக்கிறார்.