படத்துக்காக 8 கிலோ குறைத்து அடையாளம் தெரியாமல் மாறிப்போன நந்திதா..! புகைப்படம் உள்ளே

0
1215
Nanditha swetha
- Advertisement -

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டாகாத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்க்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” என்ற படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.

Actress-nanditha

புலி படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததால் என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. புது முக இயக்குனர் கீதா ராஜ்புட் என்பவரின் இயக்கத்தில் நடிக்கப்போகும் இவர், அந்த படத்தில் 7 வயது பையனுக்கு அம்மாவாக நடிக்க உள்ளாராம். இதற்காக தனது உடல் எடையை 8 கிலோ குறைத்துள்ளாராம்.

- Advertisement -

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகுந்த சவாலாகவும், வித்யாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் வசந்த், எம் எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்களாம்.

Nanditha

nanthitha

nanthitha-Actress

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்த படத்தில் நடித்த பிறகு தனது நடிப்பை பலரும் பாராட்டுவார்கள் என்று நந்திதா நம்பிக்கையுடன் இருக்கிறாராம். இந்த படத்தை இயக்கும் இயக்குனர் கீதா ராஜ்புட் இயக்குனர் பாலாவிடம் உதவியாளராக பணியாற்றியர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement