என் தோளில் கை வைத்தார்..!பாவனா கடத்தல் வழக்கில் சிக்கிய திலிப் குறித்து பேசிய நடிகை..!

0
1126
- Advertisement -

பிரபல நடிகையான பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக பல்சர் சுனில் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் கேரள காவல்துறை தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகர் திலீப் பணம் கொடுத்ததாலேயே பாவனாவை கடத்தியதாக பகீர் தகவலை தெரிவித்தார்.

-விளம்பரம்-

இதனை அடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல நடிகையான நவ்யா நாயர் திலீப்புடன் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

- Advertisement -

தமிழில் அழகிய தீயே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நவ்யா நாயர். தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக் கிளிகள், மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சினிமா அனுபவங்கள் குறித்து நவ்யா நாயர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:–

நான் நடித்த முதல் மலையாள படம் இஷ்டம். 2001–ல் வெளியானது. டைரக்டர் சிபி மலயில் எனது போட்டாவை பார்த்து விட்டு ஒரு ஓட்டலுக்கு அழைத்து நடிப்பு திறமையை பரிசோதித்தா அந்த வீடியோவை பார்த்த திலீப்புக்கு எனது நடிப்பு பிடித்ததால் இஷ்டம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

கிராமத்தில் இருந்து வந்த என்மீது அறிமுகம் இல்லாத ஆண் கைவைத்ததால் சங்கடத்துக்கு உள்ளானேன். அதை புரிந்துகொண்ட திலீப் பயப்பட வேண்டாம். எல்லோரும் ஆதரவாக இருப்போம். இந்த படத்தில் ஒன்றாக பணியாற்ற போகிறோம் என்று தைரியம் சொன்னார். அதை எப்போதும் மறக்க முடியாது.’’

Advertisement