நிறைவடைந்த ‘KVRK’ படப்பிடிப்பு, சமந்தாவிற்கு பரிசாக நயன்தாரா கொடுத்தது. என்ன கிப்ட்டுன்னு தெரியுமா? – இது தான் காரணம்

0
324
- Advertisement -

பொதுவாகவே சினிமா உலகில் நடிகைகள் தோழிகளாக இருப்பது அதிசயமான ஒன்று. அதிலும் தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருப்பவர்கள் தோழிகளாக திகழ்வது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளாக திகழ்பவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவரும் இவர்கள் இருவரும் இப்போத சமீப காலமாகவே மிக நெருக்கமாக இருக்கிறார்கள். இது குறித்து பலரும் பாராட்டி கமெண்ட்ஸ் போட்டு இருந்தார்கள். இதற்கு காரணம் இவர்கள் சேர்ந்து நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் தான்.

-விளம்பரம்-

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா கொடிகட்டி பறந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சில வருடங்களாகவே நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம், அல்போன்ஸ் புத்திரன் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதேபோல் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் சமந்தா.

- Advertisement -

சமந்தாவின் திரைப்பயணம்:

இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வந்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ் ஆனது. இதனை தொடர்ந்து இவர் மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். பிறகு இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலிவுட் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சாகுந்தலம், யசோதா ஆகிய பல படத்தில் சமந்தா பிசியாக நடித்து வருகிறார்.

காத்துவாக்குல 2 காதல் நடிக்கும் நடிகர்கள்:

இப்படி இருவருமே தென்னிந்திய சினிமா உலகில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இருந்தும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதற்கு காரணம் காத்துவாக்குல 2 காதல் படம் தான். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ளது.

-விளம்பரம்-

காத்துவாக்குல 2 காதல் படம் பற்றிய தகவல்:

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா காதீஜா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

நயன்தாரா கொடுத்த கிப்ட்:

மேலும், இந்த படத்தில் பணிபுரிந்ததிலிருந்தே சமந்தா – நயன்தாரா இருவரும் நல்ல நட்பை பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சமந்தாவிற்கு நயன்தாரா அளித்திருக்கும் பரிசு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகை சமந்தாவிற்கு நயன்தாரா அவர்கள் காதணியை பரிசாக கொடுத்துள்ளார். இதை நடிகை சமந்தா இன்ஸ்டாவில் ஷேர் செய்து நயன்தாராவிற்கு நன்றி தெரிவித்து உள்ளார். அதோடு நயன்தாரா படப்பிடிப்பு முடிந்ததால் சமந்தாவிற்கு இந்த பரிசு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement