விஜயுடன் நேரடி மோதலில் நடிகை நயன்தாரா..!

0
1429

தேனாண்டாள்ல் பிலிம்ஸ் தயாரிப்பில் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்து உள்ளனர்.
எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
இந்தப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

Image result for vijay mersal

இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடித்து வெளிவரும் “அறம்” படமும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக தகவல்.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாராவின் `வேலைக்காரன்’ படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `அறம்’ படம் அந்த இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Image result for aram nayanthara
தணிக்கை குழுவின் முடிவு வர தாமதமானதால் படம் சரஸ்வதி பூஜைக்கு ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும் தணிக்கை குழுவில் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எனவே விஜயின் மெர்சலுடன் நயன்தாராவின் அறம் நேரடி போட்டியில் குதித்துள்ளது.