நயன்தாரா போட்ட 30 நிமிட கண்டிஷன் ! இது ரொம்ப ஓவர் ! கடுப்பில் இயக்குனர்கள் !

0
1037
nayanthara condition
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா.பல ஆண்டுகளாக டாப் ஹீரோயினியாக இருந்து வருகிறார்.மேலும் வருடத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக சிறந்த நடிகை என்ற பட்டத்தை ஏதாவது ஒரு படத்திற்காக வென்றுவிடுவார் நயன்.

nayanthara

முதலில் முன்னணி ஹீரோகளிடன் நடித்த நயன்தாரா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நடித்த அரம் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் இவர் தமிழில் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இவரது கால் ஷீட் கிடைத்துவிடாத என்று பல இயக்குனர்கள் இவருக்கு வலை வீசி வரும் நிலையில் தம்மிடம் கதை கூற வரும் இயகுணர்களுக்கு ஒரு சில கண்டிஷன்களை விதித்துல்லாராம் நயன். மேலும் அதையும் மீறி அவரிடம் கால் சீட் வாங்கிவிட்டாராம் ஒரு மலையாள புது முக இயக்குனர்.

Nayanthara Actress

சமீபத்தில் மலையாளத்தில் பல படங்களில் நடித்த தயன் ஸ்ரீனிவாசன் என்பவர் இயக்கத்தில் லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார் நயன் . ஆனால் அந்த படத்தின் கதையை கூற நயன்தாராவிடம் போன் செய்துபோது நான் 30 நிமிடம் மட்டும் தான் கதை கேட்பேன், அதை தொடர்ந்து எனக்கு பிடித்தால் மட்டுமே மேலும் கேட்பேன் பிறகு கோவப்படக்கூடாது என கூறியுள்ளார் நயன்.

ஆனால் அவர் கதையை நயன்தாராவிற்கு கூறிய 10 நிமிடத்திலேயே அந்த கதை அவருக்கு பிடித்துவிட்டதாம். அதன் பிறகு அவரே மிகவும் ஆர்வமாக மீதி கதையையும் கேட்டாராம். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ளதாகவும் அதில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement