மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு ஆதரவாக நடிகை நயன்தாராவின் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சர்வதேச விளையாட்டு திருவிழாவான 33 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில் 26 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அடங்கியிருக்கிறது.
மேலும், இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் தகுதி பெற்று இருக்கிறார்கள். இவர்கள் 16 விளையாட்டு களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதுவரை நடந்த போட்டியில் மூன்று பதக்கங்கள் இந்தியா வென்று இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை துணாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இருக்கிறார். இவர் மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானுடன் மோதி இருந்தார்.
தகுதி நீக்கம் செய்ய காரணம்:
இறுதியில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் இவர் கியூபா வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். ஆனால், அதில் அவர் உடல் எடை அதிக காரணமாக பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தம் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரது உடல் எடை 50 கிலோவுக்கு மேல் 100 கிராம் கூடியதால் தான் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபலங்கள் ஆறுதல்:
இந்தச் செய்தி இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே உடல் எடையை குறைக்க வினேஷ் போகத், தீவிர பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இதனால் இவரின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தினேஷ் போகத் இறுதிச்சுற்றில் தகுதி நீக்கம் செய்ததற்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா பதிவு:
அந்த வகையில் நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்தை ஆதரித்து, ‘நீங்கள் பலரை ஊக்குவிக்கிறீர்கள், உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை. நீங்கள் ஒரு பெரிய பரிசை பெற்றுள்ளீர்கள். அது எந்த சாதனையையும் மிஞ்சும் ஆழமான அன்பு. இனி நீங்கள் தலைநிமிர்ந்து நடங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். தற்போது நயன்தாராவின் இந்த பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், தற்போது வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நயன்தாரா குறித்து:
தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக நயன்தாரா கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமன்றி தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். கடைசியாக, இவர் நடித்து வெளிவந்த ‘அன்னபூரணி’ படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது இவர் தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.