என்னது நயன்தாரா குரல் இவருடையதா.! டப்பிங் கொடுப்பது இந்த சீரியல் நடிகையா..! புகைப்படம் உள்ளே !

0
2238

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் தங்களது சொந்தக் குரலிலேயே படங்களுக்கு டப்பிங் செய்து விடுவார்கள். ஆனால் ஒரு சில ஹீரோயின்கள் மட்டுமே தங்களது சொந்த குரலில் டப்பிங் செய்வார்கள். இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான நடிகைகள் வேறு மாநிலத்தில் இருந்து வந்த நடிகைகளாகவே இருப்பதால் அவர்களின் மொழி உச்சரிப்பு அவ்வளவு நன்றாக இருப்பதில்லை.

nayanthara

மேலும் படங்களில் நடிகர்களின் வசனங்களை கேட்கும் ரசிகர்களுக்கு , அவர்களுக்கு பரீட்சியமான குரலாக இருந்தால் இன்னும் சற்று கதைக்குள் ஒன்றி படம் பார்க்கும் வாய்ப்பும் சற்று அதிகரிக்கும்.அந்த வகையில் முன்னணி நடிகையான நயன்தாராவின் குரல்ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.அந்த குரலுக்கு சொந்தகாரி வேறு யாரும் இல்லை பிரபல சீரியல் நடிகை தீபா வெங்கட் தான்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அதிகப்படியான படங்களில் டப்பிங் செய்துள்ளார் தீபா வெங்கட்.இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்க்கு முதன் முதலில் டப்பிங் கொடுத்துள்ளார் தீபா. மேலும் இவரின் டப்பிங் நயன்தாராவிற்கு பிடித்து போக இவருக்கு தனி ஒருவன் படத்திற்கும் டப் செய்ய அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார்.மேலும் இதுவரை நயன்தாரா நடித்த பெரும்பாளான படங்களில் இவர் தான் நயன்தாராவின் குரலுக்கு சொந்தக்காரியாக இருந்துள்ளார். தீபா இதுவரை நயன்தாரா நடித்துள்ள

Actress-deepa

* ராஜா ராணி
* தனி ஒருவன்
* மாயா
* இது நம்ம ஆளு
* காஸ்மோரா
* அறம்
* வேலைக்காரன்
* நீ எங்கே என் அன்பே
* இமைக்கா நொடிகள்

deepa venkat

போன்ற பல படங்களில் நயன்தாராவிற்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் நயன்தாரா மட்டுமன்றி லட்சுமி மேனன்,காஜல் அகர்வால், சுனைனா,ஹன்சிகா போன்ற பல நடிகைகளுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார் தீபா.