நடிகர் தனுஷ் மீது நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டி வெளியிட்டு இருக்கும் அறிக்கை தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில்
ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது.

இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை 'Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் அந்த வீடியோவுடைய ட்ரெய்லர் வந்தது. இந்த திருமண நிகழ்வு வீடியோ வருகிற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகும் என்று netflix நிறுவனமே அறிவித்திருந்தது.
நயன்தாரா போஸ்ட்:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தனுஷ் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி இன்ஸ்டாவில் பதிவு போட்டு இருக்கிறார். அதில் அவர், அன்புள்ள திரு. தனுஷ் கே ராஜா அவர்கள் பல தவறான விஷயங்களை செய்வதற்காக இது உங்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம். நீங்கள் நல்ல நடிகர், பிரபலமான இயக்குனர், உங்கள் தந்தை, சகோதரி ஆதரவுடன் ஆசியுடனும் இதைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது நிறைய என்னை போன்றவர்களுக்கு வாழ்வதற்கான ஒரு போராட்டம் என்பது நாங்கள் அனைவரும் அறிந்ததே.
ஆவணபடம் குறித்து சொன்னது:
தொழில் துறையில் எந்த ஒரு தொடர்பும் இல்லாத சுயமாக இந்த இடத்திற்கு வந்த பெண் நான். இப்போது நான் வகித்து வரும் பதவிக்கு பல போராட்டங்களை கடந்து வந்திருக்கிறேன். என்னை அறிந்த நண்பர்கள், பார்வையாளர்கள் என்னுடைய திரைப்பட சகோதரத்துவத்தின்கொண்டவர்களுக்கு உண்மை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. என்னுடைய netflix ஆவணப்படத்தின் வெளியிட்டு நான் மட்டுமல்ல என்னுடைய ரசிகர்கள், நலன் விரும்பிகள் பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கும் என்னுடைய கணவருக்கும் எனக்கும் எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் எங்களை மட்டுமல்ல இந்த திட்டத்திற்காக தங்கள் நேரத்தையும் உழைப்பையும் கொடுத்து மக்களையுமே பாதிக்கிறது.

தனுஷ் செய்த வேலை:
என் வாழ்க்கை, என் காதல் திருமணம் பற்றிய இந்த நெட்பிளிக்ஸ் ஆவணப்படத்தில் என்னுடைய தொழில் நலன் விரும்பிகள் பலருடைய காட்சிகள் இருக்கிறது. அவர்கள் மனதார பங்களித்தவர்கள். பல படங்களின் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். ஆனால், மிகவும் முக்கியமான அவசியமான நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை இதில் பயன்படுத்த முடியவில்லை. நானும் ரவுடிதான் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட அந்த பாடலின் வரிகள் தான். ஆனால், அந்த வரிகளை கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற எல்லோருக்குமே புரியும்.
இத்தகு நீங்கள் தடையில்லா சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டீர்கள். இதை வியாபார ரீதியிலோ, சட்டரீதியிலோ இருந்தால் நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என் மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமே இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களுடைய இந்த நடவடிக்கையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆட்சேபனை இல்லாத சான்றிதழின் உங்களுடைய ஒப்பிடுதலுக்காக இரண்டு வருடங்கள் காத்திருந்தோம். இருந்தும் நீங்கள் அனுமதிக்க மறுத்து வழக்கு போட்டு இருக்கிறீர்கள். பலமுறை கோரிக்கை விடுத்தும் நீங்கள் நிராகரித்து இருக்கிறீர்கள். நானும் ரவுடிதான் பாடல்கள் அல்லது காட்சிகள் வெட்டி மிக குறைவான புகைப்படங்களை கூட பயன்படுத்த முடியவில்லை.
Nayanthara open letter to Dhanush. pic.twitter.com/uX2iNFaqoT
— LetsCinema (@letscinema) November 16, 2024
தனுஷ் மீதான குற்றச்சாட்டு:
உங்களுடைய அனுமதி இல்லாததால் இந்த படம் வெளியாக இவ்வளவு தாமதம் ஆகிறது. ட்ரைலரில் வெளியான மூன்று நொடி காட்சிக்கு 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டீர்கள். இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. சினிமா பின்னணி இல்லாமல் வந்தால் இப்படி எல்லாம் செய்வீர்களா? உண்மையில் மனிதர்களை இழிவாக பார்ப்பது இந்த உலகில் எளிதாக இருக்கிறது. மற்றவர்களுடைய மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சி இருக்கிறது. அதை பார்க்கும் கதைகளில் இருந்தும் நம்பிக்கை இருக்கிறது என்பதை தான் netflix ஆவணப்படத்தின் பின்னணியில் இருக்கிறது.
நீங்களும் அதை பார்க்க பரிந்துரைக்கிறேன். ஒருவேளை அது உங்கள் மனதை மாற்றக்கூடும். அன்பை பரப்புவது ரொம்ப முக்கியம். என்றாவது ஒரு நாள் நீங்களும் அதை சொல்லாமல் முழுமையாக செய்ய முடியும் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அடுத்தவர்களுடைய உணர்ச்சியை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். உங்களுடைய கொடும் சொற்களை என்னால் எப்போதுமே மறக்க முடியாது. அதனால் ஏற்பட்ட காயமும் என்றென்றுமே ஆறாது. உங்களுடைய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். நானும் ரவுடிதான் படம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கும் பாடல்களுக்கும் தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கான நீங்கள் நீதிமன்றத்தில் விலக்கி கொள்ளுங்கள். ஆனால், கடவுள் மன்றத்தில் நீங்கள் உண்மையை சொல்லி தான் ஆகணும். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் .






