பிரபு தேவா படத்தில் நடிக்க மறுத்தது ஏன்..? கண்ணீருடன் காரணத்தை கூறிய நயன்

0
2123
Prabu dheva

நடிகர் சிம்புவின் காதல் முறிவிற்கு பிறகு நடிகை நயன்தாரா நடன புயல் பிரபு தேவாவை காதலித்து வந்தார். அவரது பெயரை கூட பச்சை குத்திக் கொண்ட நயன்தாரா பிரபுதேவா படங்களில் நடித்ததோடு , பிரபுதேவா நடனமாடிய பல மேடைகளில் அவருடன் ஜோடி சேர்ந்து நடனமையுள்ளர். ஆனால் தற்போது பிரபுதேவாவுடன் படத்தில் நடிக்க நோ சொல்லி விட்டாராம் நயன்தாரா.

Prabhu-Deva

நடிகரும் நடன இயக்குனருமான பிரபு தேவா சில ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்கியும் வருகிறார். தமிழில் இவர் இயக்கிய படங்கள் ஓரளவிற்கு சுமார் தான் என்றாலும் தெலுங்கில் இவர் இன்னமும் ஹிட் படங்களை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளறாராம். அந்த படத்தில் தமிழின் முன்னனி ஹீரோ ஒருவர் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருதி தங்கள் இருவருக்கும் நெருக்கமான ஒரு நபரை தூது அனுப்பியுள்ளார் பிரபு தேவா.

nayanthara

அந்த நபரும் நயன்தரவிடம் பிரபுதேவா படத்தில் நடிப்பதை குறித்து கேட்டுள்ளார். ஆனால் பிரபு தேவாவின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் நயன்.மேலும் தூது வந்த நபரிடம் ” பிரபு தேவா மீது எனக்கு கோவம் எல்லாம் கிடையாது நான் அவரை மிகவும் நம்பினேன் , அவர் தான் வாழ்கை என்றும் முடிவு செய்தேன் ஆனால் இறுதியில் அவர் என்னை ஏமாற்றி விட்டார் என்று கண்ணீர் மல்க கூறினாராம் நயன்தாரா “