இதனால் தான் என் தந்தை இறந்தார், இந்த பழக்கம் இருந்தா தயவு செஞ்சி விட்ருங்க – நீலிமா கண்ணீர் வீடியோ.

0
34541
neelima
- Advertisement -

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகளை விட வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்த நடிகைகள் தான் அதிகம். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை நீலிமா. 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல்வேறு திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும், 30க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார்.’ நான் மகான் அல்ல’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வாங்கினார். பிறகு வழக்கம் போல் நடிகை நீலிமாவும் சின்ன துறை நோக்கி பயணம் செய்தார். இவர் நடித்த முதல் சீரியல் 1998ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற சீரியல் தான்.

- Advertisement -

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல தொடர்களில் நடித்து உள்ளார். இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உள்ளார். இவருக்கு சிறு வயதிலேயே அதாவது 21 வயதிலேயே திருமணம் செய்து விட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் திருமணம் ஆனாலும் தொடர்ந்து தொடர்களிலும், சினிமாக்களிலும் நடித்து கொண்டு தான் இருக்கிறார்.

அதே போல யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது தந்தை இறப்பு குறித்து பேசிய நீலிமா,  தன்னுடைய, அப்பா தூங்கிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். அப்போது, நான் அவருக்கு அருகில் தான் படுத்திருந்தேன். இப்போது வரை அது என்னுடைய நியாபத்தில் உள்ளது. என்னுடைய தந்தை இறந்தது புகைப்பழக்கத்தால் தான். அதனால் புகைப்பழக்கம் இருந்தால் இன்றே அந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement