காவலன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது ! எப்படி இருக்காங்க பாருங்க

0
7042
Neepa kaavalan

கடந்த அஞ்சு வருஷமா சினிமாவிலிருந்து விலகியிருக்கேன். குடும்பத்துக்கு அதிக நேரத்தை ஒதுக்கிட்டு, டான்ஸ் வகுப்புகளும் எடுத்துட்டிருக்கேன். வாழ்க்கை அமைதியா போயிட்டு இருக்குது” – உற்சாகமாகப் பேசுகிறார் நடிகை நீபா. நடிப்பு, டான்ஸ், குடும்பம் பற்றிப் பேசுகிறார்.
Actress-Neepa

காவலன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி…
அதில் வடிவேலு சாருக்கு ஜோடியா நடிச்சேன். என் ஸ்கூல் டைம் ஃபேவரைட், விஜய் சார். அவருடன் நடிச்சது அளவில்லா மகிழ்ச்சி. ரொம்பவே ஹேப்பியா நடிச்சோம். எல்லோரும் நிறைய விஷயங்களைப் பேசினோம். வடிவேலு சார் செமையா எல்லோரையும் கலாய்ச்சு சிரிக்க வைப்பார். நான் காமெடி ரோல்லயும் நல்லா நடிப்பேன் என்பதை தெரியப்படுத்தத்தான் அந்தப் படத்துல நடிச்சேன். அதுக்குப் பிறகு நிறைய காமெடி ரோல்கள்ல வாய்ப்புகள் வந்துச்சு. அதையெல்லாம் மறுத்துட்டேன்.

- Advertisement -

டான்ஸரான நீங்க, நடிக்க வந்தது எப்படி?”

“அப்பா வாமன் மற்றும் அம்மா மாலினி ரெண்டு பேரும் ஃபேமஸான டான்ஸர்ஸ். என் சின்ன வயசுல அம்மாகிட்ட கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். அப்போ அம்மா சினிமாவுல பிஸியா இருந்தாங்க. அதனால, ஒரு மாஸ்டர்கிட்ட முறைப்படி டான்ஸ் கத்துகிட்டு அரங்கேற்றம் செய்தேன்.

-விளம்பரம்-

Neepa actress

நடிகை ஶ்ரீதேவியின் மிகத் தீவிரமான ரசிகை நான். அவங்க நடிச்ச ‘ஜெகதீக வீருடு அதிலோக சுந்தரி’ படத்தை ஆயிரம் முறைக்கும் மேலயே பார்த்திருப்பேன். சின்ன வயசுல இருந்து ஶ்ரீதேவின் படங்களைப் பார்த்து, ஒருகட்டத்துல நடிகையாகணும்னு ஆசைப்பட்டேன். அம்மாகிட்டச் சொன்னேன்.

‘உன் சொந்தத் திறமையில முன்னுக்கு வா’னு சொல்லிட்டாங்க. ஸ்கூல் முடிச்ச தருணம். விஜய் டிவி ‘காவியாஞ்சலி’ சீரியல் ஆடிஷன்ல செகலக்ட் ஆனேன். அந்த சீரியல்ல ஹீரோயினா நடிச்சேன். அடுத்தடுத்து நிறைய சீரியல்கள் மற்றும் படங்கள்ல நடிச்சேன். இடையில், என் அம்மா, ஶ்ரீதர், லாரன்ஸ் உள்ளிட்ட பல டான்ஸ் மாஸ்டர்கள்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்ணினேன்.

Neepa actress

சன் டிவி ‘மஸ்தானா மஸ்தானா’ மற்றும் கலைஞர் டிவி ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிகளின் டைட்டில் வின்னரானேன். ரெண்டு படங்கள்ல டான்ஸ் மாஸ்டராவும் வொர்க் பண்ணியிருக்கேன்.”

Advertisement