பொதுவாக பாலிவுட் திரை உலகில் தான் ஹீரோக்கள் என்றால் சிக்ஸ்பேக் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி உடலமைப்பு என்ற லாஜிக்கை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், கடந்த சில காலமாக தற்போது தென்னிந்திய நடிகைகளும் பாலிவுட் பாணியில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது சமீபத்தில் சேர்ந்தவர் தென்னிந்திய நடிகையான நிக்கி கல்ராணி மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் 2015 ஆம் ஆண்டு ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால், டார்லிங் படத்திற்கு முன்பாகவே கன்னடன் மற்றம் மலையாளம் என்று ஒரு சில படங்களில் நடித்துள்ளார் நடிகை நிக்கி கல்ராணி. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1993-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி, மனோகர் கல்ரானி, ரேஷ்மா ஆகியோருக்கு மகளாக பிறந்தார். ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரி ஆவார். இவர் பெங்களூரிலேயே பிறந்து, வளர்ந்து தன் படிப்பை முடித்தவர். இவர் முதன் முதலாக மலையாள மொழி படம் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகமானார்.
இதையும் பாருங்க : 45 ரூபாய் வாடகை வீடு, கீற்று கொட்டாய்ல வாழ்க்கை. ஜெயம் ரவி குடும்பத்தார் பகிர்ந்த ஷாக்கிங் பிளாஸ் பேக்.
இவர் தற்போது தமிழ், கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். மேலும்,நடிகை நிக்கி கல்ராணி நடிப்பு தவிர பல விளம்பர படங்களிலும், மாடலாகவும் நடித்து வருகிறார். தமிழில் இளம் நடிகர்களான ஜீவா, விஷ்ணு விஷால் போன்ற பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். ஆனால் அம்மணிக்கு இன்னும் முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக ஜீவாவுடன் ‘கீ ‘என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.
தற்போது ராஜவம்சம் என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் நிக்கி கல்ராணி அஜித் நடித்துள்ள வலிமை படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில காலமாக உடல் எடையை குறைத்து வந்த நிக்கி கல்ராணி தற்போது கண்ணங்கள் சுருங்கும் அளவிற்கு படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.