வற்புறுத்திய காதலன்..! போலீசில் புகார்..! தீக்குளித்த நடிகை நிலானி காதலன் பரிதாப பலி.!

0
1104
Nilani
- Advertisement -

தூதுக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பொது மக்கள் சுட்டுக் கொன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் சீரியல் நடிகை நீலானி என்பவர் காவல் சீருடையில் வெளியிட்ட வீடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

nilani actress

- Advertisement -

இந்நிலையில் சீரியல் நடிகை நிலானியால், காந்தி லலித்குமார் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் நடிகையான நிலானி பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். கடந்த 3 வருடங்களாக நிலானிக்கும் காந்தி லலித்குமார் என்பவருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரது பழக்கமும் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால், சில பல காரணத்தால் நிலானி, காந்தி லலித்குமாரிடம் இருந்து சற்று ஒதுங்கி இருக்கிறார். தொடர்ந்து தன்னிடம் இருந்து விலகி இருந்ததால் கோபமடைந்த லலித் குமார் சமீபத்தில் நிலானி படப்பிடிப்பில் இருந்த போது அங்கு சென்று தகராரில் ஈடுபட்டுள்ளார்.

-விளம்பரம்-

Nilani

இதை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலானி, லலித் குமாருடன் நான் ஒரு தோழியாக பழகி வந்தேன் ஆனால், தற்போது அவரை திருமணம் செய்துகொள்ள சொல்லி கட்டாயபடுத்துகிறார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் வந்து என்னை அவதூறாக பேசினார். எனவே,அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நிலானி புகார் அளித்துள்ளார்.

Actress Nilani

இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) காலை லலித் குமார் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். அதிகப்படியான தீக்காயங்குளடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement