கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனருடன் காதலனது எப்படி ? திருமணம் எப்போது ? நிரஞ்சினி பேட்டி.

0
1696
niranjani
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான்நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மாநடித்து இருந்தார். இவர்களுடன் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பல நடிகர்கள்நடித்து இருந்தனர் . ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-188.jpg

மேலும், இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாகவும், ரக்ஷ்னுக்கு ஜோடியாகவும் நடிகை நிரஞ்சனி நடித்திருப்பார். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். பொதுவாகவே சினிமா உலகில் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை படங்களில் நடிகர், நடிகை, இயக்குனர் என அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் எல்லாம் அந்த வகையில் வந்தவர்கள் தான்.

- Advertisement -

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அகத்தியனின் மகள் நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொல்லையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமியுடன் நிரஞ்சனிக்கு திருமணம் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனது காதல் குறித்தும் திருமண பிளான் குறித்தும் கூறியுள்ள்ளார் நிரஞ்சினி.

விஜயலட்சுமி, நிரஞ்சனி, கனி

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், இந்தப் படத்துல கமிட்டாகுற வரைக்கும் தேசிங்கை எனக்கு சுத்தமா தெரியாது. படத்தோட கேரக்டருக்காகத்தான் முதல்ல சந்திச்சார். படத்தோட வேலைகள் தொடங்குனதுல இருந்து ரெண்டு பேரும் நண்பர்களாக இருந்தோம். இதுக்குப்பிறகு, கொஞ்சம் கொஞ்சமா எங்களைப் பற்றி நல்லா தெரிஞ்சிக்கிட்டு, ஒரு புரிதல் வந்ததும் கல்யாணம் பண்ற முடிவை ரெண்டு பேரும் எடுத்தோம். எங்க ரெண்டு பேருடைய வீட்டுலயும் இதுக்கு சம்மதம் சொன்னாங்க என்று கூறியுள்ளார். மேலும், எங்க திருமணத்தை பிப்ரவரி 25-ம் தேதி வெச்சிருக்கோம். கடலுக்கு முன்னாடியிருக்குற திடல்ல கல்யாணம் பண்ணனும் ஆசை. இதனால பாண்டிச்சேரில திருமணம் செய்ய இருக்கோம் என்று கூறியுள்ளார் நிரஞ்சினி.

-விளம்பரம்-
Advertisement