என்அம்மா கிட்ட சண்டை போட்டனா,புருஷன் வீட்டுக்கு வந்துடுவேன்- ஆங்கர் டு கல்யாணம் வரை நிஷா கணேஷ் அளித்த பேட்டி

0
653
Nisha
- Advertisement -

சின்னத்திரை சீரியலில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை நிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து இல்லாதரிசிகளிடயே பிரபலமானவர் நடிகை நிஷா. முதலில் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளியான இருந்தார். பின் நிஷா சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபிஸ், சரவணன் மீனாட்சி, மஹாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்துள்ளார். மேலும், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கணேஷ் வெங்கட் ரமனின் மனைவி என்பது குறிப்பித்தக்கது. கணேஷ் வெங்கட் ராமன் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘அபியும் நானும்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் உன்னைப்போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற பல படங்களில் நடித்துளளார். மேலும், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தியது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதனிடையே நிஷா- கனேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் இருக்கிறாள். நிஷா கர்ப்பமாக இருக்கும் காலத்தில் இருந்தே சீரியலில் இருந்து விலகி விட்டார். இருந்தாலும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கிறார். தற்போது இவர் சீரியலில் நடிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கும் MY3 வெப் சீரிஸில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

- Advertisement -

நிஷா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நிஷா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், என்னுடைய 16 வயதில் மீடியா பயணம் ஆரம்பித்தது. பேப்பரில் பார்த்து விட்டு விளம்பரத்திற்காக ஆடிசன் போனேன். எல்லாமே சீக்கிரமாக ஒரே வாரத்தில் முடிந்துவிட்டது. செலக்ட் பண்ணி அந்த விளம்பரம் ஷூட்டிங்கும் ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அனுபவம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் பிளஸ் டூ முடித்தவுடன் விஸ்காம் செலக்ட் பண்ணினேன். படித்துக் கொண்டே ஜாலியாக வேலை பார்க்க ஆரம்பித்தேன். அதோடு சின்ன வயதிலேயே ஸ்டேஜ் ஈவண்ட் எப்பவும் பண்ணி கொண்டு இருப்பேன். அதனால் எங்க வீட்டிலும் மீடியா பீல்டுக்கு ஓகே சொல்லிவிட்டார்கள். முதலில் ஆங்கரிங் செய்து கொண்டு இருந்தேன்.

Bigg Boss Ganesh Venkatraman Wife Nisha's Grandmother Passes

நிஷாவின் சீரியல் பயணம்:

பின் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கனா காணும் காலங்கள் சீரியல் பண்ணேன். சமீபத்தில் நடந்த கனா காணும் காலங்கள் ரீ யூனியனுக்கு வந்தேன். செமையாக இருந்தது. அப்படியே பல சீரியல்கள் பண்ணினேன். உண்மையை சொல்லப்போனால் நான் ஸ்போட்ஸ்பர்சன். அதனால் துரத்தும் சீன் எடுக்கும்போது வில்லன்கள் எல்லாம் பயங்கரமாக கஷ்டப்படுவார்கள். ஏனென்றால், நான் அத்லெடிக் பிளேயர் என்பதால் ஓடுங்க என்று சொல்லும்போது கட கட கட வென்று ஓடிவிடுவேன். பிறகு தலையணை பூக்கள் தொடரில் கதாநாயகியாக நடித்தேன். என்னுடன் இந்த சீரியலில் நடித்த ஸ்ரீக்கு ஒரு நன்றியை சொல்லவேண்டும். உண்மையாலுமே எக்ஸ்ட்ராடினரி வேற லெவல் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு சீனுக்கும் எக்ஸ்ட்ரா உழைப்பு போட்டு நடிப்பார்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து நிஷா கூறியது:

பிறகு எனக்கும் கணேசுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சீரியலில் நடிக்க முடியவில்லை என்றாலும் டிஜிட்டல் மீடியாவில் ஆக்டிவாக ஏதோ ஒன்று பண்ணிக் கொண்டுதான் இருந்தேன். கர்ப்பமாக இருக்கும்போதும் ஜெயா டிவியில் ஜெயா ஸ்டார் சிங்கர்ஸ் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு சைந்தவி, தரண் இருவரும்தான் நடுவர்களாக இருந்தார்கள். நானும் சைந்தவியும் ரொம்ப குளோஸ். அவருடைய அம்மா எனக்காக சமைச்சு எல்லாம் கொடுப்பார்கள். என்னை ரொம்ப கேர் எடுத்து பார்த்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கும் போது எனக்கு ஏழு மாதம். ஆனாலும், செட்டில் எல்லோரும் சப்போர்ட் பண்ணி என்னை ஆங்கரிங் பண்ண வைத்தார்கள். அப்போது இருந்து இப்போது வரைக்கும் சைந்தவி கூட நல்ல நட்பு இருக்கு. எந்த விஷயம் என்றாலும் சந்தோஷம், கஷ்டம் என எதுவாக இருந்தாலும் நன் சைந்தவி விடம் மனசு விட்டுப் பேசுவேன்.

நிஷா நடிக்கும் வெப்சீரிஸ்:

அந்த மாதிரி வாணி போஜன் கூடவும் இப்ப வரைக்கும் டச்சில் இருக்கிறேன். சன் டிவியில் ஒரு தொடரில் நடிக்க சம்மதம் எல்லாம் சொல்லிட்டேன். கடைசி நேரத்தில் குழந்தை கூட இன்னும் கொஞ்ச நேரம் செலவழிக்க வேண்டும் என்று தோணியது. அதனால் படங்கள் வெப்சீரிஸ் பொருத்தவரை சீக்கிரம் சூட்டிங் முடிந்து விட்டு வீட்டுக்கு வந்து விடலாம். சீரியல் என்றால் காலையிலிருந்து நைட் வரைக்கும் அங்கேயே இருக்க வேண்டிய சூழல். அதனால் பாப்பா உடன் நேரம் ஒதுக்க முடியாது. அதனால் தான் சீரியலில் நடிக்க முடியவில்லை. இன்னும் ஒரு வருடம் கழித்து நடிக்கலாம் என்று தோன்றுகிறது. பின் எனக்கு இயக்குனர் ராஜேஷ் அறிமுகமானார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கியவர்.

கணேஷ் குறித்து நிஷா சொன்னது:

அவருடைய தான் my 3 வெப்சீரிஸ். ரொம்ப ஜாலியான ஒரு இயக்குனர். தற்போது படங்கள், வெப்சீரிஸ் இப்ப போயிட்டு இருக்கு கூடிய விரைவில் சீரியலிலும் நடிப்பேன். அதேபோல் நான் எங்கே எங்கே வேணாலும் போவேன். நீ எங்கேயும் போக கூடாது என்கிற எண்ணம் இல்லாமல் ஒருத்தரை ஒருத்தர் சமமாக ட்ரீட் பண்ணனும். எல்லார் வீட்டிலும் புருஷன் கூட சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டுக்கு போவார்கள். நான் என் அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு புருஷன் வீட்டுக்கு வருவேன். அந்த அளவுக்கு கணேஷ் வேற லெவல். அவருக்கு எந்தவித ஒளிவு மறைவும் இல்லாமல் இருந்தாலும் ஒப்பனா பேசுவார் என்று கூறி இருக்கிறார்

Advertisement