ரஜினி, கமல் படங்களில் நடித்த முன்னணி நடிகை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்பது காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நிஷா நூர்.இவர் தமிழில் மங்கள நாயகி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆகியிருந்தார்.

அதற்குப்பின் இவர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருடைய திரை வாழ்க்கைக்கு தீர்ப்பு முனையாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் இனிமை இதோ இதோ, விசுவின் அவள் சுமங்கலித்தான் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். பின் தமிழில் இயக்கத்தின் இமயம் பாலச்சந்திரனின் கல்யாண அகதிகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நிஷா நடித்திருந்தார்.

Advertisement

அதனை அடுத்து ரஜினிகாந்தின் நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்திலும் நிஷா நடித்து இருந்தார். இப்படி இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அதற்குப் பின் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

இந்நிலையில் நடிகை நிஷா நூரின் கடைசி காலம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் தர்காவிற்கு வெளியே உடல் எலும்புகள் மெலிந்து தெரியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் இருந்திருக்கிறார். அதற்கு பின் தான் அவர் நடிகை நிஷா நூர் என்று தெரிய வந்தது.

Advertisement

மேலும், அவருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த எய்ட்ஸ் நோயால் இவர் அவஸ்தை பட்டு மிகவும் பாதிக்கப்பட்டு இறுதி காலத்தில் கவனிக்க யாரும் இன்றி 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இறந்துவிட்டார். இப்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நிஷா நூர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
Advertisement