நான் சாதி பெயரை வைத்து இருக்கிறேனா? தன் பெயருக்கான விளக்கத்தை கொடுத்த நித்யா மெனன்

0
275
- Advertisement -

தன்னுடைய பெயருக்கான முழு விளக்கம் குறித்து முதன் முறையாக நித்யா மெனன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் நித்யா மெனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். பின் மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த சைக்கோ படத்தில் நித்யா நடித்திருந்தார். அதற்கு பிறகு அம்மணியை பெரிதாக படங்களில் காணவில்லை. இடைப்பட்ட காலத்தில் குண்டாக இருந்த நித்யா மெனன் உருவக் கேலிக்கு உள்ளாகி இருந்தார்.

- Advertisement -

நித்யா மெனன் திரைப்பயணம்:

இதனால் உடல் எடையை குறைக்க முடிவு செய்த நித்யா மெனன் அவர்கள் சித்தா மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதன் பலனாக இவர் உடல் எடையை குறைத்ததால் இவருக்கும் மீண்டும் பட வாய்ப்புகள் வரத்துவங்கி இருக்கிறது. கடந்த ஆண்டு வெளிவந்த தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தில் நித்யா மெனன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .

நித்யா மெனன் படங்கள்:

சமீபத்தில் இவர் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கியிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவிலேயே ரிலீசாக இருக்கிறது.

-விளம்பரம்-

நித்யா மெனன் பேட்டி:

இதை அடுத்து இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நித்யா மெனன் கமிட்டாகியிருக்கிறார். இது தவிர இவர் தனுஷ் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய பெயரின் அர்த்தம் குறித்து நித்யா மெனன் கூறியிருப்பது, யாருமே என்னுடைய பெயரை சரியாக புரிந்து கொள்வது கிடையாது. படப்பிடிப்பு முடிந்த உடனே, கொச்சிக்கு டிக்கெட் புக் பண்ணனுமா? என்று கேட்கிறார்கள். ஆனால், நான் கன்னடத்தை சேர்ந்தவள்.

பெயரின் விளக்கம்:

என்னுடைய பெயரில் இருக்கும் மெனன் என்பது நான் வைத்தது. நிறையப்பேர் மேனன் எனக் கருதுகிறார்கள். அது அப்படி கிடையாது. ஜாதி பெயர் பயன்படுத்துவது எனக்கு பிடிக்காது. இதற்கு முன்பு என்னுடைய பெயர் என்.எஸ். நித்யா என்றிருந்தது. பெங்களூரில் அப்பா, அம்மா பெயர் முதல் எழுத்தை கொண்டு தான் வைப்பது வழக்கம். அதனால் அம்மா பெயர் நளினி, அப்பா பெயர் சுகுமார். அதனால் என் எஸ் நித்யா என்று வைத்திருந்தேன். ஆனால், பாஸ்போர்ட்டில் பிரச்சனைகள் வந்ததால் மெனன் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டேன். ஜோதிடம் பார்த்து தான் அந்த பெயரை வைத்தேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement