பயன்படுத்திய உடைகளை ஏலம் விடும் நித்யா மேனன்- அப்படி என்ன ஸ்பெஷல் அந்த உடையில் ?

0
2031
Nithya

மலையாள சினிமாவில் இருந்து பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தனர். நயன்தாரா அமலா பால் துவங்கி அனுபமா பரமேஸ்வரன் வரை அனைவரும் கேரள சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். அந்த வகையில் பிரபல நடிகையான நித்யா மேனனும் ஒருவர். நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். படங்களில் நடிகத்துவங்கும் போதே சற்று பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகினார்கள்.

180 படத்தை தொடர்ந்து தமிழ்,தெலுகு,மலையாளம் என்று பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் விஜய் ,விகர்ம்,சூர்யா போன்ற நடிகர்களுடன் நடித்துவிட்டார். விஜய்யுடன் மெர்சல், சூர்யாவுடன் 24, விக்ரமுடன் இருமுகன் என்று தமிழில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகை நித்யா மேனன் தனது உடைகளை ஏலத்திற்கு விடுவதாக சமீபத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர்,

- Advertisement -

நான் இந்த உடையை ஏலத்திற்காக கொடுக்கப் போகிறேன். அதன் மூலம் வரும் 100 சதவீத பணத்தையும் அப்பணம் டிரஸ்ட்டுக்கு செல்லும். அவர்கள் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். கொரோனாவால் முடங்கியுள்ள அவர்களுக்கு பண உதவி செய்து மீண்டும் அவர்கள் சொந்த காலில் நிற்க வழிசெய்யப்படும். இந்த உடை பல மாதங்கள் தயாரான டிசைனர் உடை. அது எனக்காகவே பிரேத்யேகமாக செய்யப்பட்டது.

இந்த உடையை நான் சமீபத்தில் பே‌ஷன் நிகழ்ச்சியில் ரேம்ப் வாக் செய்த போது வடிவமைக்கப்பட்ட பிரேத்யேக உடை. இதன் புகைப்படத்தை முன்பே நான் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனது தோழியும் பிரபல டிசைனருமான காவேரி தான் இதை டிசைன் செய்தார் என்று கூறியுள்ளார் நித்யா மேனன்.

-விளம்பரம்-
Advertisement