என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் – அதிர்ச்சி கொடுத்த நடிகை நித்யா மேனன்.

0
19731
Nithya

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னனி நடிகைகள் எல்லாம் கேரளாவில் இருந்து வந்தவர்கள். அந்த வகையில் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். மேலும், இவர் 180 படத்தை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை நித்யா மேனன் அவர்கள் விஜய் ,விகர்ம், சூர்யா போன்று பல முன்னனி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார். சமீப காலமாகவே சினிமாவில் உள்ள பல பிரபல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.

இதில் தமிழ் சினிமாவில் இருந்து பல நடிகைகள் இடம் பெற்று உள்ளார்கள். அந்த வகையில் சினிமா உலகிற்கு வந்த குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை நித்யா மேனன். இவர் தற்போது தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். சமீபத்தில் தான் நடிகை நித்யா மேனன் அவர்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில கொடுமையான விஷயங்களை பேட்டியில் பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் சினிமா உலகிற்கு எதிர்பாராதவிதமாக தான் வந்தேன். அதோடு ஒன்று இரண்டு படங்களில் மட்டும் நடித்து விட்டுப் போய்விடலாம் என்று நினைத்தேன். ஆனால், சினிமா மீது எனக்கு இருந்த ஈர்ப்பு காரணம் தான் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்தது.

இதையும் பாருங்க : வலிமை படத்தில் இருந்து விலகினாரா யுவன் ? இப்போ இவர் தான் இசையமைப்பாளராம்.

- Advertisement -

எப்போதுமே எனக்கு என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டது இல்லை. ஆனால், சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தார்கள். நான் அதை எல்லாம் நினைத்து கவலைப்படாமல் அவர்களிடம் விட்டுக்கொடுக்காமல் பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று கடுமையாக கூறினேன். வாழ்க்கையில் இந்த மாதிரி மோசமான மிருகங்களிடமிருந்து என்ன விளைவுகள் வந்தாலும் முதலில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் இந்த மாதிரி விஷயத்தில் தலையிடுவது குறித்து யோசிப்பார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே முடித்துவிட வேண்டும்.

Nithya

-விளம்பரம்-

அது மட்டுமில்லாமல் எந்த ஒரு பிரச்சனைக்கும் நாம் எடுக்கும் முடிவில் தயங்காமல் தைரியமாக இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அவர்கள் முகத்தில் அறைந்த மாதிரி தைரியமாக பேச வேண்டும். மேலும், ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு அவளுடைய தைரியமும், நம்பிக்கையும் தான் என்று கூறியிருந்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் அனைவரும் நடிகை நித்யா மேனனுக்கு பாராட்டுகளை தெரிவித்து உள்ளார்கள். தற்போது நடிகை நித்யா மேனன் அவர்கள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் “தி ஐயன் லேடி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்காக நடிகை நித்யா மேனன் அவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று செய்வதற்காக பல விசேஷ பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்ற தகவல் வெளி வந்து உள்ளது.

Advertisement